வியாசர்பாடி இரவிஸ்வரர் கோயில்

இரவீஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் சென்னையில், வியாசர்பாடி என்னும் பகுதியில் எருக்கஞ்சேரி சாலையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். சிலர் இதனை இரணீஸ்வரர் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

சிறப்பு

தொகு

அதிகாலையில் சூரிய வெளிச்சமானது இங்கு அமைக்கப்பட்டுள்ள இலிங்க வடிவிலான சிவன் சன்னதியில் கழுத்தில் மாலை சூடுவது போன்று விழும் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது இக்கோவிலின் மிகச் சிறப்பான அம்சமாகும். நகரமயமாக்கலினால் தற்போது அதிக நெருக்கமான வீடுகள் இக்கோவிலைச் சுற்றி உள்ளதால் தற்போது சிவன் கழுத்தில் மாலை போல் சூரிய வெளிச்சம் விழுவதைக் காண இயலவில்லை.

சன்னதிகள்

தொகு

சிவன், தட்சிணாமூர்த்தி, வினாயகர், முருகர், அம்மன் சன்னதிகளும், நவகிரக துணை சன்னதியும் உள்ளன.

வரலாறு

தொகு

இக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.[சான்று தேவை]