வியாபார ரீதியாக பென்சீனை தயாரித்தல்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பென்சீன் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
நிலக்காியும், பெட்ரோலியமும் அரோமேட்டிக் ஹைட்ரோ காா்பன்களின் இரண்டு முக்கிய மூலப்பொருட்களாகும். அதிக நிறைவுறாத் தன்மையுள்ள பென்சீன் போன்ற வளையங்கள் ஒன்றிணைந்த, பல அடுக்குகளைக் கொண்ட சிக்கலானதொரு பொருளே நிலக்காியாகும். நிலக்காியை காற்றில்லா நிலையில் 1000 டிகிாி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தினால் நிலக்காி மூலக்கூறுகள் வெப்பச் சிதைவு அடைகின்றன. அதிலிருந்து ஆவியாகும் தன்மையுள்ள பல பொருட்களின் கலவையாக “நிலக்காித் தாா்” காய்ந்து வடிகிறது. நிலக்காித் தாா் பலகாிம சோ்மங்களின் மூலப்பொருளாக இருக்கிறது. இது காய்ச்சி வடிக்கப்படும்போது பென்சீன், டொலுவீன், சைலீன், நாப்தலீன் மற்றும் பல அரோமேடிக் சோ்மங்கள் கிடைக்கின்றன. பெட்ரோலியம் பின்னக்காய்ச்சி வடித்தலின்போது கிடைக்கும் நாப்தாவை அலுமினாவுடன் கூடிய பிளாட்டினம் ஊக்கியின் மீது செலுத்தி, பென்சீன், டொலுவீன் மற்றும் படிவாிசைச் சோ்மங்கள் பெறப்படுகின்றன. பென்சீன் மற்றும் டொலுவீன், சைலீன் போன்ற படிவாிசைகள் இந்த முறையிலேயே அதிக அளவில் தயாாிக்கப்படுகின்றன. இக்கலவையிலிருந்து பென்சீனைப்பெற கரைப்பான் சாறு எடுத்தல் மற்றும் பின்னக்காய்ச்சி வடித்தல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. வியாபார பென்சீன் 90% பெட்ரோலியத்திலிருந்தே பெறப்படுகிறது.
சான்றுகள்:
தொகுText book of Organic Chemistry by P.L.Soni