பிருகஸ்பதி

(வியாழன் (சோதிடம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிருகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். [1] இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவக்கிரக அந்தஸ்து பெற்றார். அதனால் பிருகஸ்பதியின் கிரகமான வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது. [2]

பிருகஸ்பதி
பிருகஸ்பதி
பிருகஸ்பதி
தேவநாகரிबृहस्पति
வகைதேவன், கிரகம்
இடம்தேவலோகம்
கிரகம்வியாழன் (கோள்)
மந்திரம்ஓம் பிருகஸ்பதாயே நமக
துணைதாரை

இவர் இடம் பெயர்வதே குருப் பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிருகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.

இது சோதிடத்தின் படி இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம் ஆகிய இராசிகள் ஆகும். இவர் ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவராவார்.

ஆட்சி, உச்சம் பற்றிய தகவல்

தொகு
நட்பு ஆட்சி உச்சம் பகை நீச்சம்
மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் தனுசு, மீனம் கடகம் ரிஷபம், மிதுனம், துலாம் மகரம்

பார்வை

தொகு

குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்ப்பார் என சோதிடம் சொல்கிறது.

பாலினம்

தொகு

கிரகங்களில் இவர் ஆண்.

தகவல்கள்

தொகு

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருவின் நட்சத்திரகங்கள். குரு இரண்டு வகைப்படும். அவை தேவ குரு மற்றும் அசுர குரு. தேவ குரு தான் நமது குரு பகவான் ஆவார். அசுர குரு 'சுக்கிரன்' ஆவார். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, பிறப்பில் குரு திசை நடக்கும்.

தகவல்
உலோகம் தங்கம்
ரத்தினம் புஷ்பராகம்
உடை பொன்நிற ஆடை
தூப தீபம் ஆம்பல்
வாகனம் யானை
வகுப்பு அந்தணர்

குரு திசை

தொகு

குரு திசை சரியாக 16 வருடங்கள் கொண்டது.

புத்தி வருடம் மாதம் நாட்கள்
குரு 2 1 18
சனி 2 6 12
புதன் 2 3 6
கேது 0 11 6
சுக்கிரன் 2 8 0
சூரியன் 0 9 18
சந்திரன் 1 4 0
செவ்வாய் 0 11 6
ராகு 2 4 24


இவற்றையும் பார்க்கவும்

தொகு

சோதிடம்

மேற்கோள்கள் ஆதாரங்கள்

தொகு
  1. "எல்லாம் தரும் திட்டை குரு".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://tamil.webdunia.com/religion/astrology/quesionanswer/1107/20/1110720046_1.htm குரு, சுக்ரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்று ஏன் சொல்கிறார்கள்? = ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருகஸ்பதி&oldid=3221334" இலிருந்து மீள்விக்கப்பட்டது