விய்யூர் சிறை பூங்கா

விய்யூர் சிறை பூங்கா (Viyyur Jail Park) என்பது இந்தியாவில் கேரளாவின் திருச்சூர் நகரில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு அருகில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்கா ஆகும். இந்த பூங்கா கேரள மாநிலத்தின் பழமையான பூங்காவாகும்.[1][2][3]

விய்யூர் சிறை பூங்கா
சுதந்திரப் பூங்கா
விய்யூர் சிறை பூங்காவின் அடிக்கல்
வகைபொது பூங்கா
அமைவிடம்விய்யூர், திருச்சூர், இந்தியா
பரப்பளவு60 ஏக்கர்
உருவாக்கம்1875
இயக்குபவர்மத்திய சிறைச்சாலை, விய்யூர்
நிலைஅனைத்து நாட்களிலும் திறந்திருக்கும்

வரலாறு

தொகு

1875ஆம் ஆண்டு பதினாறாம் இராம வர்மாவின் மனைவி பருகுட்டி நெத்தியார் அம்மா தனது சொந்த நிலத்தில் உருவாக்கியது இந்தப் பூங்காவாகும். விய்யூர் மத்திய சிறை, திருச்சூர் நகரிலிருந்து விய்யூருக்கு மாற்றப்பட்ட போது, இதே இடத்தில்தான் சிறையும் கட்டப்பட்டது. பூங்கா இப்போது சிறையுடன் ஒரு சுவரைப் பகிர்ந்து கொள்கிறது. பல தசாப்தங்களாக இந்த பூங்கா நலிவடைந்து வந்தது. ஆனால் விய்யூர் மத்திய சிறைச்சாலையால் கையகப்படுத்தப்பட்டது. 2013ல், திருச்சூர் சட்டமன்ற உறுப்பினர் பூங்காவை மீண்டும் மேம்படுத்த நிதி வழங்கினார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Viyyur Park to open today". Mathrubhumi. பார்க்கப்பட்ட நாள் 2014-12-06.
  2. "Jail Park to open, Page 24, Thrissur Edition". Manoramaonline.com. Archived from the original on 2016-08-19. பார்க்கப்பட்ட நாள் 2014-12-06.
  3. "Public park opened at Viyyur Central Jail". பார்க்கப்பட்ட நாள் 2014-12-07.
  4. "Chillax@Viyyur: Freedom Park to be opened on Central Jail premises". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
  5. "Jailhouse park set to rock". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விய்யூர்_சிறை_பூங்கா&oldid=3661935" இலிருந்து மீள்விக்கப்பட்டது