பதினாறாம் இராம வர்மா

சர் பதினாறாம் இராம வர்மா (Rama Varma XVI) (1858 - 21 மார்ச் 1932) இவர் 1915 முதல் 1932 வரை கொச்சி இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்தார். [1]

கொச்சின் வருவாய் முத்திரையில் பதினாறாம் இராம வர்மா
திருச்சூர் நகரில் பதினாறாம் இராம வர்மாவின் சிலை

ஆட்சி

தொகு

இவர், 1914 இல் பதினைந்தாம் ராம வர்மா பதவி விலகி பின் பதவிக்கு வந்தார். இவர் 1915 சனவரி 25 முதல் 21 மார்ச் 1932இல் தான் இறக்கும் வரை ஆட்சி செய்தார்.

மரபு

தொகு

கோட்டை நகரமான திருச்சூர் வளாகத்திற்குள் ஒரு புதிய தேவாலயம் கட்ட உதவிய மன்னர் என்று இவர் நினைவுகூரப்படுகிறார். இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயம் என்று அழைக்கப்படும் புனித வியாகுல அன்னை பெருங்கோயில் திரிச்சூரில் உயரமாக இன்றும் நிற்கிறது. இது கிறிஸ்தவர்களின் மீதான மன்னனின் அன்பைக் காட்டுகிறது.

இறப்பு

தொகு

21 மார்ச் 1932 அன்று சென்னையில் தனது 74 வயதில் இறந்தார். அவர் மெட்ராசில் இறந்ததால், இவர் 'மெட்ராசில் தீபெட்டா தம்புரான்' என்று அழைக்கப்படுகிறார்.

குறிப்புகள்

தொகு
  1. "List of rulers of Kochin". worldstatesmen.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினாறாம்_இராம_வர்மா&oldid=3084953" இலிருந்து மீள்விக்கப்பட்டது