விராஜ்லால் சாத்திரி

குஜராத்தி எழுத்தாளர்

விராஜ்லால் காளிதாஸ் சாத்திரி (Vrajlal Kalidas Shastri) குஜராத்தி மொழியில் தத்துவவியலின் முன்னோடியும் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.[6][7][8][9]

விராஜ்லால் சாத்திரி
இயற்பெயர்
વ્રજલાલ કાળિદાસ શાસ્ત્રી
பிறப்புவிராஜ்லால் காளிதாஸ் சாத்திரி
(1825-11-26)26 நவம்பர் 1825 [1]
மலதாஜ், பெட்லாட், குசராத்து
இறப்பு14 நவம்பர் 1892(1892-11-14) (அகவை 66)[1]
தொழில்தத்துவவியலாளர், கவிஞர், அறிஞர், மொழிபெயர்ப்பாளர்
மொழிகுஜராத்தி
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • குஜராத்தி பாசானோ இதியாசு (1866)[2]
  • உத்சர்கமா (1870)[3][4]
  • ததுசங்கிரகா (1870)[5]
  • குர்ஜார் பாசா பிரகாசு (1892)

வாழ்க்கை

தொகு

1825 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி குசராத்தின் பெட்லாட்டில் உள்ள மலதாஜ் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை தனது கிராமமான மலதாஜில் பயின்றார். சமசுகிருத பாடசாலையில் சமசுகிருத கவிதை மற்றும் இலக்கணத்தைப் படித்தார். பிராகிருத இலக்கணமும் இலக்கியமும் கற்றார். அகமதாபாத்தில் உள்ள சைனக் கோயிலில் சமசுகிருதம் கற்பித்தார். சைன மத புத்தகங்கள் காரணமாக, இவர் பிராகிருத- பாளி, அபபிராம்சம், மாகதிப் பிராகிருதம் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தார். எனவே இவர் குஜராத்தியின் தத்துவவியல் பற்றிய புத்தகங்களை எழுதினார். இவர் குஜராத் வித்யா சபை மற்றும் தர்ம சபை ஆகியவற்றுடன் பணிபுரிந்தார். மேலும், அவர்களின் இரண்டு பத்திரிகைகளான புத்திபிரகாஷ் மற்றும் தர்மபிரகாஷ் ஆகியவற்றைத் திருத்தி வெளியிட்டார். [8] [10]

ஆராய்ச்சியாளராகவும், அறிஞராகவும் இருபத்தைந்து ஆண்டுகள் பணிபுரிந்த இவர் நவம்பர் 14, 1892 இல் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Shastri, Hariprasad (1990). "Shastri Vrajlal Kalidas". Gujarati Sahityakosh (Encyclopedia of Gujarati Literature) 2. Ahmedabad: Gujarati Sahitya Parishad. 57. 
  2. Maharashtra (India) (1971). Maharashtra State Gazetteers: General Series. Directorate of Government Print., Stationery and Publications. p. 340.
  3. V. K. Narasimhan (1958). The languages of India: a kaleidoscopic survey. Our India Directories & Publications Private Ltd. p. 30.
  4. Mansukhlal Maganlal Jhaveri (1978). History of Gujarati Literature. New Delhi: Sahitya Akademi. p. 108.
  5. Krishnalal Mohanlal Jhaveri (1956). Further milestones in Gujarāti literature. N.M. Tripathi. p. 18.
  6. Lal (1992). Encyclopaedia of Indian Literature. Sahitya Akademi. p. 3997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1221-3. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  7. Thomas Albert Sebeok (1972). Current Trends in Linguistics. Mouton. p. 111.
  8. 8.0 8.1 Lal (1992). Encyclopaedia of Indian Literature. Sahitya Akademi.Lal (1992).
  9. Sujit Mukherjee (1998). A Dictionary of Indian Literature. Orient Blackswan. p. 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1453-9.
  10. Sujit Mukherjee (1998). A Dictionary of Indian Literature. Orient Blackswan.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விராஜ்லால்_சாத்திரி&oldid=3826998" இலிருந்து மீள்விக்கப்பட்டது