விராடதேசம்

விராடதேசம் சூரசேநதேசத்திற்கு தென்மேற்கிலும், மத்சயதேசத்திற்கு தெற்கிலும், சால்வதேசத்திற்குக் கிழக்கிலும் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

தொகு

இந்த விராடதேசமானது முழுமையும் செம்மண்ணும், களிமண்ணும் கலந்த பூமியாக இருக்கும். இந்த தேசத்தின் இந்த பூமி அமைப்பால் கருங்கோரைப் புல்லும், மஞ்சாடி, கோரை, அருகம் மற்றும் மரங்களும் செழித்து இருக்கும்.[2]

பருவ நிலை

தொகு

இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும்.

மலை, காடு, மிருகங்கள்

தொகு

இந்த தேசத்தின் வடக்குப் பக்கத்தில் பிரம்மகிரி என்ற பெரிய மலை உண்டு, மலையின் அடிவாரத்திலிருந்து சிறிய காடுகளும், அவைகளில் சில சிறு மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் சிறு, சிறு மலைகள் உள்ளது. இந்த மலைகள் சதத்ருநதியின் கரையில் இருக்கின்றது.

நதிகள்

தொகு

இந்த தேசத்தின் பூமியானது வடக்கில் உயர்ந்தும், தெற்கில் தாழ்ந்தும் இருக்கும் இமய மலைகளிலிருந்து இரு நதிகள் உண்டாகி விராடதேசத்தின் மேற்கு முகமாய் ஓடி, சதத்ருநதியுடன் இணைந்துவிடுகிறது.

விளைபொருள்

தொகு

இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.

கருவி நூல்

தொகு

சான்றடைவு

தொகு
  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 77 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=விராடதேசம்&oldid=2076822" இலிருந்து மீள்விக்கப்பட்டது