விராலிமலை சண்முகம்
விராலிமலை சண்முகம் என்று அறியப்படும் சண்முகம், இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட 1963-ஆம் ஆண்டு அலுவல்மொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது நஞ்சுண்டு இறந்த போராளி ஆவார்.
வாழ்க்கை
தொகு1943 ஆகஸ்ட் 11 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையில் மு.இராமையா, சவுந்தரம் அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்து, குடும்பத்துடன் விராலிமலையில் வாழ்ந்து வந்தார். மளிகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டு பொதுக்கூட்டங்களில் மொழிப்போர் பற்றிப் பேசிக்கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத் துணைச்செயலாளராக இருந்தார்.
இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம்
தொகுஇந்தி திணிப்பைக் கண்டித்து போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வலுப்பெற்றுக் கொண்டிருக்க, சண்முகமும் அதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.[1]
தற்கொலை
தொகுபோராட்டம் தீவிரப்பட்டுக்கொண்டிருக்க காவல் துறையினரின் அடக்கு முறையும் கட்டுக்கடங்காமல் சென்றது. பல இளைஞர்கள் உயிரிழந்து கொண்டிருந்தனர். இந்த நேரத்தில், இரண்டு இரயில் பெட்டிகள் சாம்பலானால் திரும்பப் பெறலாம், இரண்டு மாணவர்கள் உயிரிழந்தால் திரும்பப் பெறமுடியுமா, மாணவர்களே போராட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் என்ற அண்ணாவின் வேண்டுகோள் மாணவர்களையும், இளைஞர்களையும் திகைக்க வைத்தது. சண்முகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தி.முக.தலைவரவர்களே, தமிழைக் காக்கத் தவறிவிட்டீர்கள். இன்னும் பயம் வேண்டுமா அய்யா, பக்தவச்சலத்தின் ஆட்சியில் தமிழ் தழைக்க வழியின்றி போய்விட்டது. தமிழ்த்தாயின் புதல்வர்களையும் பாதுகாப்பு சட்டம் என்னும் போர்வையால் மூடிமறைத்துவிட்டார்கள். தமிழ்த்தாயின் பாதம் இரத்தத்தால் கறைபடிந்துள்ளது அண்ணா நீங்கள் ஆணையிட்டால் தமிழகம் தங்கள் ஆணையைச் செய்யக் காத்துக்கொண்டிருக்கிறது. சும்மா இருந்து விடாதீர்கள். [2] என்று அண்ணாவுக்கு கடிதம் எழுதிவிட்டு 1965 பிப்ரவரி 25 ஆம் திகதியன்று அன்று நஞ்சுண்டு மாண்டு போனார். 19.8.1979 அன்று விராலிமலையில் நிறுவபட்ட சண்முகம் படிப்பகத்தை அண்ணா திறந்து வைத்தார்.[2] 7.8.81 அன்று சண்முகத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட கல்லறையை அன்பில் தர்மலிங்கம் திறந்து வைத்தார்[3]