விரிச்சி (வெட்சி)

தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் விரிச்சி என்பது அகத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். பொதுவாக விரிச்சி என்பது வாயிலிருந்து வரும் சொல் என்னும் பொருள் கொண்டது. சிறப்பாக, முன் பின் தெரியாத ஒருவரிடமிருந்து வரும் சொற்களைக் கேடு அதற்குப் பொருள் கொள்வது விரிச்சி என்பர். வெட்சித் திணையில், பகைவர்களின் ஆநிரைகளைக் கவரச் செல்லும் வீரர்கள் தெரியாதவர்களின் வாயிலிருந்து வரும் சொற்களைக் கேட்டு அதிலிருந்து, தமது செயல் நன்மையாக முடியுமா இல்லையா என்று அறிவதைப் பொருளாகக் கொள்வது விரிச்சி ஆகும்.

இதனை விளக்க, "பகைவரது பசுக் கூட்டங்களைக் கவர விரும்பும் வீரர்கள், தமது செயல் நன்மையாக முடியுமா அன்பதை அறிந்து கொள்வதற்காக, இருண்ட மாலை நேரத்தில் நல்ல சொற்களைக் கேட்பது விரிச்சி" [1] என்னும் பொருள்படும் பின்வரும் கொளுப் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.

வேண்டிய பொருளின் விளைவு நன்குஅறிதற்கு"
ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று

எடுத்துக்காட்டு தொகு

எழுஅணி சீறூர் இருள்மாலை முன்றில்
குழுஇனம் கைகூப்பி நிற்பத் - தொழுவில்
குடக்கள் நீ கொண்டுவா என்றாள் கனிவில்
தடக்கையாய் வென்றி தரும்
- புறப்பொருள் வெண்பாமாலை 03.

குறிப்பு தொகு

  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 19

உசாத்துணைகள் தொகு

  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிச்சி_(வெட்சி)&oldid=1339145" இலிருந்து மீள்விக்கப்பட்டது