விர்ஜீனியா (பாம்பு)

விர்ஜீனியா
விர்ஜீனியா இசுடிரையேடுலா]]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலுபிரிடே
பேரினம்:
விர்ஜீனியா

பெயர்டு & ஜியர்டு, 1853
வேறு பெயர்கள் [1]
  • ஆம்பியர்டிசு
  • கலாமரியா
  • செலுடா
  • கொலுபர்
  • கோனோசெபாலசு
  • பால்கோனேரியா
  • கால்டியா
  • நாட்ரிக்சு
  • பொட்டாமோபிசு

விர்ஜீனியா என்பது அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சிறிய, தரைவாழ், கொளுப்பிரிட் பாம்புகளின் பேரினமாகும். இவை பொதுவாக பூமி பாம்புகள் என்று குறிப்பிடப்படுகின்றன.

சிற்றினங்கள்

தொகு
  • விர்ஜீனியா இசுட்ரியாடுலா (லின்னேயஸ், 1766) -கரடுமுரடான பூமி பாம்பு (இப்போது பலரால் ஹால்தியா என்ற பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளது)
  • விர்ஜீனியா வாலேரியா பைர்ட் & ஜிரார்ட், 1853-மென்மையான பூமி பாம்பு

புவியியல் வரம்பு

தொகு

விளக்கம்

தொகு

விர்ஜீனியா பேரினத்தினைச் சார்ந்த பாம்புகள் சிறிய பாம்புகள் ஆகும். இவை அரிதாகவே 10 அங்குலங்களுக்கு (25 செமீ) மேல் வளருகின்றன (வால் உட்பட) உள்ளன. இவை பொதுவாக சீரான பழுப்பு நிற மெற்பகுதியினையும் வெளிர் நிற அடிப்பகுதியினையும் கொண்டவை. சிற்றினங்களை வேறுபடுத்துவது கடினமாக இருக்கலாம். ஆனால் வி. வலேரியா மென்மையான செதில்களைக் கொண்டுள்ளது. அதேசமயம் விர்ஜீனியா இசுட்ரியாடுலா இணைப்புடன் கூடியச் செதில்களை கொண்டுள்ளது.

வாழ்விடம்

தொகு

விர்ஜீனியா சிற்றினங்கள் புதைந்து வாழக்கூடியன. இவை பெரும்பாலான நேரத்தை தளர்வான மண்ணில், அழுகும் மரக்கட்டைகளின் கீழ் அல்லது இலை குப்பைகளில் கழிக்கின்றன.

உணவு

தொகு

விர்ச்ஜீனியா சிற்றினப் பாம்புகள் மண்புழுக்கள் மற்றும் மென்மையான உடல் கொண்ட கணுக்காலிகளைச் சாப்பிடுகின்றன. இவை பவள பாம்பு போன்ற பிற பாம்பு இனங்களுக்கு உணவு ஆதாரமாக உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Wright, A.H., and A.A. Wright. 1957. Handbook of Snakes of the United States and Canada. Comstock. Ithaca and London. 1,105 pp. (in 2 volumes) (Genus Haldea, p. 286.)
  2. Stewart, James R. 1988. Facultative Placentrophy and the Evolution of Squamate Placentation: Quality of Eggs and Neonates in Virginia striatula. The American Naturalist. 133:111-137
  3. Adler, K. 1979. A brief history of herpetology in North America before 1900. Soc. Study Amphib. Rept., Herpetol. Cir. 8:1-40. . 1989. Herpetologists of the past. In K. Adler (ed.). Contributions to the History of Herpetology, pp. 5-141. Soc. Study Amphib. Rept., Contrib. Herpetol. no. 5.

மேலும் வாசிக்க

தொகு
  • Baird, S.F., and C.F. Girard. 1853. Catalogue of North American Reptiles in the Museum of the Smithsonian Institution. Part I.—Serpents. Smithsonian Institution. Washington, District of Columbia. xvi + 172 pp. (Genus Virginia, p. 127.)
  • Blanchard, F.N. 1923. The Snakes of the Genus Virginia. Papers Mich. Acad. Sci. 3: 343–365, illustrations.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விர்ஜீனியா_(பாம்பு)&oldid=4127353" இலிருந்து மீள்விக்கப்பட்டது