விலக்குதல் (சதுரங்கம்)
சதுரங்க விளையாட்டில் விலக்குதல் (Deflection) என்பது திட்டமிடப்பட்ட ஒரு சதுரங்க உத்தியாகும். எதிரியின் காயை அது ஆக்ரமித்துள்ள சதுரத்தில் மற்றொரு சதுரத்துக்கு விலகிச்செல்ல தூண்டுவதே விலக்குதல் எனப்படும்.[1] இது அருகில் உள்ள சதுரத்திற்கோ, வேறு வரிசைக்கோ வேறு தரத்திற்கோ நகரச் செய்வதாக இருக்கலாம். அவ்வாறு விலகிச் செல்லும் வீரரின் அரசரோ, சக்தி வாய்ந்த பிற காய்களோ தூண்டிய வீரரால் கைப்பற்றப்பட நேரிடும். குறிப்பாக இவ்வுத்தி இணைப்பு நகர்வுகள் அல்லது இணைத்துத் தாக்கும் சூழல்களில் பயன்படுகிறது. விலக்கப்படும் அந்தக்காய் குறிப்பிட்ட அந்த கட்டத்தில் இருக்கும்போது விலக்கத் தூண்டுபவரின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிற காரணத்தாலேயே அதை அவர் விலக்க முயல்கிறார். அதிகப்பலன் கொடுக்கும் ஒரு சதுரத்தில் நிற்கும் எதிரியின் காயை உபயோகமில்லாத வேறு சதுரத்திற்கு நகர்த்த வைக்கவும் பலியாட்டம் விளையாடி விலக்குதல் உத்தியை செயல்படுத்துகின்றனர்[2]. பல்வேறு உத்திகளை உள்ளடக்கியிருக்கும் இணைப்பு நகர்வுகள், தன்னுடைய ஒரு அங்கமாக விலக்குதல் உத்தியையும் வைத்துள்ளது.
அரசரைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பில் இருக்கும் ஒரு குறிப்பிட்டக் காயை அங்கிருந்து விலக்கினால் அரசரின் பாதுகாப்பையும் தகர்க்கலாம்[3] அதனால் வெற்றியையும் சுவைக்கலாம் என்பதே விலக்குதல் உத்தியின் தத்துவமாகும்.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hooper, David; Whyld, Kenneth (1992), The Oxford Companion to Chess (second ed.), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-866164-9
- ↑ Golombek, Harry (1977), Golombek's Encyclopedia of Chess, Crown Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-53146-1
- ↑ The Hook & Ladder Trick பரணிடப்பட்டது 2007-08-23 at the வந்தவழி இயந்திரம் Chess Life Dana Mackenzie
வெளி இணைப்புகள்
தொகு- Chess Tactics Repository - Deflection - Collection of chess problems on deflection
- 101 Chess Tips - Deflection பரணிடப்பட்டது 2013-05-21 at the வந்தவழி இயந்திரம் - Relates deflection to an overworked piece
- Chess Guru - Learn how to use deflection in chess - A tutorial in the use of deflection to win games
- Chess Corner - Deflection - Shows several chess problems involving deflection