விலக்கு கோட்பாடு

தாவரவியலில், விலக்கு கோட்பாடு (repulsion theory) என்பது தாவரங்களின் தண்டின் மேல் புதிதாக வளரும் இலைகளுக்கு இடையேயுள்ள தூரத்தினை எவ்வாறு சீராக்குகிறது என்பதனை விளக்க பயன்படுகிறது. இந்த கோட்பாடானது தண்டின் மேல் உள்ள ஒவ்வொரு இலையும், ஒரு புதிய இலையின் வளர்ச்சியை தடுக்க ஒரு பொருளை சுரக்கிறது என கூறுகிறது. அங்கு பொருளின் செறிவு குறைந்த அளவை அடையும் பொழுது மட்டும் முந்தைய இலையின் ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து, ஒரு புதிய இலை வளரும்.[1] இந்த கோட்பாடு பல அறுவை சிகிச்சை மற்றும் மாதிரி சோதனைகளில் ஆதரிக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Leaf Phyllotaxy". Science Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
  2. "Repulsion theory". Dictionary of Botany. பார்க்கப்பட்ட நாள் 2012-05-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலக்கு_கோட்பாடு&oldid=2385356" இலிருந்து மீள்விக்கப்பட்டது