தாவரத்தண்டு

தண்டு (stem) அல்லது தாவரத்தண்டு கலன்றாவரத்தின் இரு முதன்மை கட்டமைப்பு அச்சுக்களில் ஒன்றாகும்; மற்றது வேராகும். பொதுவாகத் தண்டு கணுக்களாகவும் கணுவிடைகளாகவும் பிரிக்கப்படுகின்றன. கணுக்கள் இலைகளாகவும், வேர்களாகவும், மற்றத் தண்டுகளாகவும், அல்லது பூக்களாகவும் (பூந்துணர்கள்) வளர்கின்ற தளிர்களைத் தாங்குகின்றன; கணுவிடைகள் ஒரு கணுவை மற்றொன்றிலிருந்து பிரிக்கின்றன. பெரும்பாலானத் தாவரங்களில் தண்டுகள் நிலப்பரப்பிற்கு மேலாக உள்ளன; நிலத்திற்கு அடியில் தண்டுள்ளத் தாவரங்களும் உள்ளன.

கணுக்களையும் இடைக்கணுக்களையும், இலைக்காம்பையும் காட்டும் தாவரத் தண்டு
இந்த தரைக்கு மேலமைந்த பாலிகோணம் தாவரத் தண்டு, இலைகள் உதிர்ந்த நிலையில், கணுக்களில் இருந்து விழுதுகள் முளைத்தல்.

தண்டுகள் நான்கு பணிகளைச் செய்கின்றன:[1]

  • இலைகள், மலர்கள் மற்றும் பழங்களுக்கு ஆதரவும் உயரமும் தருகின்றன. தண்டுகள் இலைகளை ஒளியை நோக்கி வைக்கின்றன. தாவரத்தின் பூக்களும் கனிகளும் வைக்கப்பட இடமளிக்கின்றன.
  • காழ் மற்றும் உரியம் மூலம் வேர்களுக்கும் குருத்துக்களுக்கும் நீர்மத்தை கொண்டு செல்கின்றன.
  • ஊட்டச்சத்து சேகரிப்பு
  • புதிய உயிருள்ளத் திசு தயாரிப்பு. தாவரத் திசுவின் வாழ்நாள், பொதுவாக, ஒன்றிலிருந்து மூன்றாண்டுகளாகும். தண்டுகளிலுள்ள பிரியிழையங்கள் ஆண்டுதோறும் புதிய உயிருள்ள திசுக்களை உருவாக்குகின்றன.

தண்டில் ஒளிச்சேர்க்கை

தொகு

குறிப்பிட்ட தாவரங்கள் ஓளிச்சேர்க்கையை தட்டையான தண்டுப் பகுதியின் வழி செய்கின்றன. இலையின் தொழிலை தண்டு செய்வதின் காரணமாக இவ்வமைப்பை ”இலை தொழில் தண்டு" என்கிறோம்.

சப்பை தண்டு

தொகு

சப்பை தண்டும் இலைதொழில் தண்டும் ஒன்றன்று. சப்பை தண்டு வரையறுக்கப்பட்ட வளர்ச்சியை உடையது. இவை ஒன்று அல்லது இரண்டு கணுஇடை மட்டும் கொண்டதாக வளரும். எடுத்துக்காட்டு:

  1. இரணகள்ளி[Bryophyllum Kalanchoe]
  2. தண்ணீர்விட்டான்[Asparagus]

மேற்கோள்கள்

தொகு
  1. Raven, Peter H., Ray Franklin Evert, and Helena Curtis. 1981. Biology of plants. New York, N.Y.: Worth Publishers.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87901-132-7

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரத்தண்டு&oldid=3932701" இலிருந்து மீள்விக்கப்பட்டது