விலங்கியல் நிறுவனம்
விலங்கியல் நிறுவனம் (Institute of Zoology) என்பது இங்கிலாந்தில் உள்ள இலண்டன் விலங்கியல் சங்கத்தின் ஆராய்ச்சி பிரிவு ஆகும். இது விலங்கினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது தொடர்பான அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனமாகும். வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ள இலண்டன் விலங்கியல் சங்கத்தின் ரீஜண்ட்ஸ் பூங்கா தளத்தில் இலண்டன் மிருகக்காட்சி சாலையில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.
இந்த நிறுவனத்தில் சுமார் 25 முழுநேர ஆராய்ச்சி ஊழியர்கள் உள்ளனர். மேலும் முனைவர் பட்ட பிந்தைய ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் எனப் பலர் பணிபுரிகின்றனர். இந்நிறுவனத்திற்கு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் உயர்கல்வி நிதியளிப்பு குழுவுடன் இணைந்து நிதியளிக்கிறது. மேலும் இங்கிலாந்து ஆராய்ச்சி குழுமங்கள் (என்.இ.ஆர்.சி, பிபிஎஸ்ஆர்சி, ஈ.எஸ்.ஆர்.சி) மற்றும் ஆராய்ச்சி தொண்டு நிறுவனங்களிடமிருந்து (வெல்கம் அறக்கட்டளை மற்றும் லெவர்ஹுல்ம் அறக்கட்டளை) கூடுதல் ஆராய்ச்சி நிதியைப் பெறுகிறது. விலங்குகளைப் பாதுகாத்தல், வாழிட பாதுகாப்பு, குறித்த அடிப்படை ஆய்வுகள் இந்நிறுவனத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிறுவனம் முனைவர் பட்ட ஆராய்ச்சி பட்ட படிப்பு, மாணவஆய்வுநிதி திட்டம், இளம் அறிவியல் மற்றும் முதுநிலை அறிவியல் ஆய்வு மாணவர்களுக்கான பிற நிறுவன மாணவ ஆராய்ச்சி திட்டங்களுக்கும் உதவி புரிகின்றது. இளம் அறிவியல் மாணாவ ஆய்வினை இலண்டன் விலங்கியல் பூங்கா மற்றும் விப்ஸ்நேட் மிருகக்காட்சிசாலையில் மேற்கொள்ளவும் உதவி புரிகின்றது . விலங்கியல் நிறுவனம் விலங்கு இல்லம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் காண்க
தொகு- லிவிங் பிளானட் இன்டெக்ஸ்
- சிவப்பு பட்டியல் அட்டவணை
- மண்டல சிவப்பு பட்டியல்
- இருப்பு திட்டத்தின் எட்ஜ்
- எட்ஜ் சிற்றினங்கள்
வெளி இணைப்புகள்
தொகு