இலண்டன் விலங்கியல் பூங்கா

இலண்டன் விலங்கியல் பூங்கா (London Zoo) இங்கிலாந்து நாட்டின் இலண்டன் நகரத்தில் அமைந்துள்ள உலகின் பழமையான விலங்குக் காட்சி சாலை ஆகும்.[7]

இலண்டன் விலங்கியல் பூங்கா
Map
51°32′08″N 00°09′21″W / 51.53556°N 0.15583°W / 51.53556; -0.15583
திறக்கப்பட்ட தேதி27 ஏப்ரல் 1828; 196 ஆண்டுகள் முன்னர் (1828-04-27)
அமைவிடம்ரெஜண்ட் பூங்கா
இலண்டன், ஐக்கிய ராச்சியம்
நிலப்பரப்பளவு36 ஏக்கர்கள் (15 ha)[1]
விலங்குகளின் எண்ணிக்கை19,289 (2018)[2]
உயிரினங்களின் எண்ணிக்கை673 (2018)
ஆண்டு பார்வையாளர்கள்1,078,519 (2019)[6]
உறுப்புத்துவங்கள்பியார்சா,[3] EAZA,[4] WAZA[5]
முக்கிய கண்காட்சிகள்கொரில்லா உலகம், விலங்கு வியனகம், பிளாக்பர்னமரங்கு, குளோர் மழைக்காடு காட்சியகம், இன்டூ ஆப்ரிக்கா, புலி ஆள்நிலம், சிங்கங்களின் நிலம், பெங்குயின் கடற்கரை.
வலைத்தளம்https://www.londonzoo.org
Map Map

பின்னணி

தொகு

இந்த விலங்கியல் பூங்கா 1828ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி திறக்கப்பட்டது.[8] தொடக்கத்தில் அறிவியல் ஆய்வுக்கான ஒரு மையமாக இந்தப் பூங்காவைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. 1832 ஆம் ஆண்டில் இலண்டன் கோபுர அரண்மனையில் இருந்த பல்வேறு வகையான காட்டு விலங்குகள் இந்த விலங்கியல் பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு 1947ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

தற்போது பூங்கா 698 சிற்றினங்களுடன் 20,166 தனி விலங்குகளுடன் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகத் திகழ்கிறது.[9]  இப்பூங்கா ரெஜெண்ட் விலங்கியல் பூங்கா எனவும் அழைக்கப்படுகிறது.

இப்பூங்கா இலண்டன் உயிரியில் கழகத்தின் (1826ஆம் ஆண்டு நிறுவப்பட்டது) ஆதரவுடன் நிர்வகிக்கப்படுகிறது. இப்பூங்கா ரெஜெண்ட் பூங்காவின் வடக்கு விளிம்பில் அமைந்துள்ளது. 

வரலாறு

தொகு

இலண்டன் விலங்கியல் கழகம் (ஆங்கிலம்: Zoological Society of London (ZSL) சர் இசுடாம்போர்டு இராஃபிள்சுசர் ஹம்பிரி டேவி ஆகியோர்களால் 1826 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இவர்கள் இருவரும் விலங்கியல் பூங்கா அமைக்கும் நோக்கில் நிலம் கையப்படுத்தி  அதற்கான பணிகளைத் திட்டமிட்டு வந்த சமயத்தில் அதே ஆண்டில் இராஃபிள்சு அவரது பிறந்த நாளான சூலை 5 ஆம் தேதி பக்கவாதத்தால் உயிரிழந்தார்.  அவரது இறப்புக்கு பிறகு, லான்சுடவுன் மூன்றாம் கோமானால் இத்திட்டம்  எடுத்துக்கொள்ளப்பட்டு அவரின் மேற்பார்வையில்  முதல் விலங்கு வசிப்பிடங்கள் கட்டப்பட்டன. 1828ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலண்டன் விலங்கியல் கழக ஆய்வாளர்கள் இப்பூங்காவில் இருந்த அரேபிய மறிமான், பெரு மறிமான், ஒராங்குட்டான்  அழிந்த இனங்களான தாஸ்மேனியப் புலி  தென்னாப்பிரிக்க கொகா (Quagga)  ஆகியவற்றை பார்வையிடுவதற்காகத் திறக்கப்பட்டது .  பின்னர் ஐக்கிய இராச்சிய மன்னர் நான்காம் சியார்சால்  அரச சாசனம் மூலமாக இப்பூங்காவிற்கு 1829 இல் அனுமதியளிக்கப்பட்டது. உதவி நிதிக்காக  பொதுமக்களின் பார்வைக்காக 1847 இல் இப்பூங்கா திறக்கப்பட்டது.  [10] விலங்கு காட்சிசாலை அன்றாடம் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.[11]

 
இலண்டன் விலங்கியல் பூங்காவில் பறவைக் கண் காட்சி வரைபடம், சிர்கா 1828
 
ஒட்டக இல்லம் 1835ல் வரையப்பட்ட ஓவியம்

பகுதிகளும் ஈர்ப்பிடங்களும்

தொகு
 
பூங்காவினுள் மூன்று பெரு வெள்ளைக் கூழைக்கடா பறவைகள்
குழு சிற்றினங்களின் எண்ணிக்கை தனி விலங்குகளின் எண்ணிக்கை
பாலூட்டிகள் 70 561
பறவைகள் 99 671
ஊர்வன 49 167
நீர்நிலவாழ்வன 20 726
மீன்கள் 207 5818
முதுகெலும்பிலி 228 11346
மொத்தம் 673 19289[12]

சிங்கங்களின் நிலம்

தொகு

சிங்கங்களின் நிலம் என்ற பெயரில் ஆசியச் சிங்கங்களின் வசிப்பிடம் 2016ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத்தால் திறந்துவைக்கப்பட்டது. 27,000 சதுர அடி பரப்பளவில் அமையப்பெற்ற இந்தப் பகுதியில் இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள கிர் தேசிய பூங்காவை நினைவுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியகத்தில் சிங்கங்கள் மட்டுமல்லாது அனுமான்வகை மந்தியும் குள்ளக் கீரியும் இயற்கைச்சூழலில் விடப்பட்டுள்ளன. இக்காட்சியகம் சிங்கங்களின் இயற்கையான வாழ்வாதாரங்கள் எவ்வாறு உள்ளூர் நகர்ப்புற சூழல்களோடு ஒத்துப்போகின்றன என்பதைக் காட்டுகிறது.[13]

புலி ஆள்நிலம்

தொகு

இப்பூங்காவில் சுமத்திராப் புலிகள் வாழிடம் மைக்கேல் கொஸ்தோன் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.[14] எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆல் 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில் ஐந்து புலிகள் பேணப்பட்டு வருகிறது. ஜெ. ஜெ. என்ற ஆண் புலியும் மெலாதி என்ற பெண் புலியும் மூன்று சிங்கக்குட்டிகளும் இதில் அடக்கம்.[15] 27,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் இந்தோனேசியத் தாவர வகைகள் பேணப்பட்டு வருகிறது.[16] 

மீன் காட்சியகம்

தொகு
 
பூங்காவிலுள்ள மீன் காட்சியகம்
 
பவளப்பாறை அறையில் தாமிரப்பட்டை பட்டாம்பூச்சி மீன்

இப்பூங்காவில் 1853ஆம் ஆண்டு முதல் மீன் காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இதுவே உலகின் முதல் பொது மீன்காட்சி சாலையாகும்.[17] 

மேற்கோள்கள்

தொகு
  1. "ZSL Corporate and Private Events". zsl.org. ZSL. Archived from the original on 9 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 March 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Animal inventory". Zoological Society of London (ZSL) (in ஆங்கிலம்).
  3. "BIAZA Zoos and Aquariums". biaza.org.uk. BIAZA. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
  4. "EAZA Member Zoos & Aquariums". eaza.net. EAZA. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
  5. "Zoos and Aquariums of the World". waza.org. WAZA. பார்க்கப்பட்ட நாள் 24 April 2012.
  6. "ALVA - Association of Leading Visitor Attractions". www.alva.org.uk. பார்க்கப்பட்ட நாள் 23 October 2020.
  7. "ZSL's History". ZSL. Archived from the original on 28 February 2008. பார்க்கப்பட்ட நாள் 5 March 2008.
  8. "April 27". Today in Science History. பார்க்கப்பட்ட நாள் 5 March 2008.
  9. "ZSL Animal Inventory". ZSL. 31 December 2006. Archived from the original on 28 February 2008. பார்க்கப்பட்ட நாள் 3 March 2008.
  10. "London Zoo". Places to Go. பார்க்கப்பட்ட நாள் 11 March 2008.
  11. "London Zoo". பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
  12. "Venues". London Zoo. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023.
  13. "Land of the Lions". Zoological Society of London (ZSL). Archived from the original on 2015-12-10. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
  14. Wainwright, Oliver (20 March 2013). "London Zoo's new Tiger Territory: built for the animals first, and visitors second". தி கார்டியன். https://www.theguardian.com/artanddesign/architecture-design-blog/2013/mar/20/london-zoo-new-tiger-territory. பார்த்த நாள்: 20 March 2013. 
  15. Allen, Emily (18 October 2012). "Handle with EXTREME care! Two Sumatran tigers put in crates and flown to new home at London Zoo as part of international breeding program". Daily Mail. http://www.dailymail.co.uk/news/article-2219663/Two-Sumatran-tigers-crates-flown-new-home-London-Zoo-breeding-program.html. பார்த்த நாள்: 20 March 2013. 
  16. https://www.zsl.org/zsl-london-zoo/news/tigers-mark-their-territory-at-the-zoo,996,NS.html பரணிடப்பட்டது 14 நவம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்
  17. "The History of the Aquarium". ZSL. Archived from the original on 26 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 6 March 2008.