விலங்கியல் பெயரிடுதல்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இருசொற் பெயரீடு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
விலங்கியல் பெயரிடுதல் வாயிலாக விலங்கியலாளர்கள் விலங்கின உயிர் பிரிவுகள் மற்றும் சிற்றினம் போன்றவை பற்றி தகவல்களை தங்களுக்குள் பதிர்ந்கொள்ள உதவுகிறது.
விதிப்பிரிவு 1-ன் படி விலங்கின வகைப்பாட்டில் இயற்கையில் வாழுகிற மற்றும் மறைந்த விலங்கினங்களை வகைப்படுத்த விலங்கின பெயரிடுதல் முறை வழி வகுக்கிறது. பெயரிடுதலுக்கான மூன்று அடிப்படைத் தேவைகள் பின்வருமாறு.
தனித்தன்மை
தொகுஒரு வகைப்பாட்டு அலகின் பெயர், ஒரு கோப்பின் குறியீட்டு எண் போன்றதாகும். அது அவ்வலகு பற்றிய தகவல்களை உடனடியாகப் பெறுவதற்கு உதவுகிறது. லின்னேயஸ் எழுதிய சிஸ்டமா நேச்சுரே என்ற நூலின் 10வது (1758) பதிப்பின் படி இருபெயரிட்டு முறையின் வழியாக சிறப்பினம் என்பது வகுக்கப்பட்டது.
இரு பெயரிட்டு முறையின்படி ஒவ்வொரு உயிரினமும் தனது பெயரின் முதல் பகுதியில் பேரினத்தையும் இரண்டாம் பகதியில் சிற்றினத்தையும் கொண்டுள்ளன.
சிற்றினப் பெயர் எந்த சூழ்நிலையிலும் இருமுறை அமையக் கூடாது. எடுத்துக்காட்டாக பேந்த்ரா லியோ, பேந்த்ரா டைகிரீஸ், பேந்த்ரா பார்டஸ் பேரின சிற்றினப் பெயர்களின் இணைப்பே பெயரின் சிறப்பாகும்.
பெயரின் பொதுத்தன்மை
தொகுஒரு விலங்கினத்தின் பெயரை எம்மொழிக்காரரும் அறிந்து கொள்ளும் வகையில் பன்னாட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு இலத்தீன் மொழியை மட்டும் அறிவியல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, இம்மொழி தற்போது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகையால் புதுப்புது பெயர்கள் தோன்ற வாய்ப்பில்லை. அதனால் இம்மொழி அனைவராலும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் அமைந்துள்ளது.
விலங்கினப் பெயரிடுதலுக்காக யாரும் இலத்தீன் மொழியை கற்க வேண்டிய அவசியமில்லை. சூட்டப்பட்டுள்ள பெயரின் பின்பகுதியில் அஸ் ஆ என்சிஸ் போன்ற சில சிறிய இணைப்புகளைச் செய்வதன் வாயிலாக அப்பெயர் விதிகளுக்குட்பட்ட பெயராக ஏற்றுக் கொள்ளப்படும்.
பண்டைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் படைப்புகளும் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளிலேய பதிவு செய்யப்பட்டமையால் இலத்தீன் மொழியைப் பயன்படுத்துவது சாலச் சிறந்ததாகும். பெயர்கள் இலத்தீன் மொழியில் வழங்கப்பட்டால் பண்டைய இலக்கியங்களோடு ஒப்பிட்டு பார்க்க ஏதுவாகும்.
நிலைத்தன்மை
தொகுவிலங்குகளின் பெயர்கள் இடத்திற்கு ஏற்றவாறும், காலத்திற்கு ஏற்றவாறும் அடிக்கடி மாறுமேயானால் அப்பெயர் பயனற்றதாகி விடும். மலும் ஒரு பொருளின் பெயரை அல்லது ஒரு உயிரினத்தின் பெயரை அடிக்கடி மாற்றும் போது பெரும் குழப்பமே விளையும். விலங்கினப்பெயர்களில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவே பன்னாட்டு விலங்கியல் பெயரிடல் முறைகள் உருவாக்கப்பட்டன.
வகைப்பாட்டியலாளர்கள் ஒரு சிற்றினத்திற்கு பெயர் சூட்டும் முன்பு பன்னாட்டு விதிமுறைகளை கட்டாயம் படித்து அதனை தவறாமல் பின்பற்ற வேண்டும். வகைப்பாட்டியலாளர்களின் தவறுகள் காரணமாகவே விலங்கினப் பெயர்கள் மாறுதலுக்கு உள்ளாகின்றன. கடந்த 200 ஆண்டுகளில் பல பெயர் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
பன்னாட்டு விலங்கினப் பெயரிடுதல் விதிமுறைகள் அடிக்கடி விலங்கினப் பெயர்கள் மாற்றப்படாமம் அது தொடர்பான குழப்பங்கள் தோன்றாமலும் பாதுகாப்பாய் அமைகிறது.[1]
- ↑ International Code of Zoological Nomen clature (Adopted by the 15th international congress of zoology (London) ad published on November 6, 1961)