விலங்குரிமையில் பெருமினவழிப்பு ஒப்பீடு

விலங்குகளுக்கு மனிதர்களால் நிகழும் வன்கொடுமைகள் பலவும் யூதப் பெருமினவழிப்பு நிகழ்வில் கையாளப்பட்ட செயற்பாடுகளோடு அறிஞர்களால் ஒப்புமைப் படுத்தப்படுகிறது. தனிநபர்கள் பலரும் குழுக்கள் பலவும் விலங்கு வன்கொடுமைகளுக்கும் யூதப் பெருமினவழிப்பிற்கும் இடையே நேரடி ஒப்பீடுகளை வரைந்து வந்துள்ளனர். விலங்குகள் மனிதர்களால் நடத்தப்படுவதற்கும் நாஜி மரண முகாம்களில் உள்ள கைதிகள் நாஜிக்களால் நடத்தப்பட்டதற்கும் உள்ள ஒற்றுமைகளை இரண்டாம் உலகப் போரின் முடிவில் அறிஞர்களும் எழுத்தாளர்களும் இனம் கண்டு விளக்கத் துவங்கியதிலிருந்து இந்த ஒப்புமைகள் பரவலாக வழக்கில் வரத் தொடங்கின. இவ்வறிஞர்களில் யூதப் பெருமினவழிப்பில் தப்பிப் பிழைத்தவர்களும், யூதர்கள் மட்டுமன்றி யூதர்களல்லாத பலரும் அடங்குவர். 1968-ஆம் ஆண்டு ஐசக் பாஷேவிஸ் சிங்கர் எழுதிய தி லெட்டர் ரைட்டர் (The Letter Writer) என்னும் சிறுகதை இந்த ஒப்பீடுகளை முதன் முதலாக வரைந்த இலக்கியப் படைப்பாகப் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.[2] மானநஷ்ட எதிர்ப்பு லீக் (Anti-Defamation League), ஐக்கிய அமெரிக்க யூதப் பெருமினவழிப்பு நினைவு அருங்காட்சியகம் (United States Holocaust Memorial Museum) உள்ளிட்ட யூத விரோதப் போக்கினை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் அமைப்புகளால் இந்த ஒப்பீடு கண்டிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்துள்ளது. குறிப்பாக 2006-ம் ஆண்டு முதல் விலங்கு வன்கொடுமைகளை எதிர்த்து பீட்டா அமைப்பினரால் நடத்தப்பட்ட பிரச்சாரங்களில் இந்த ஒப்புமையை அதிக அளவில் பயன்படுத்தப்படத் துவங்கியதிலிருந்து இந்த விமர்சனங்கள் பெரிதளவில் வைக்கப்படலாயின.[3]

"விலங்குகளைப் பொருத்த மட்டில் மனிதர்கள் அனைவரும் நாஜிக்களே; விலங்குகளுக்கு இவ்வுலகம் நிரந்தர மரண முகாம்," என்னும் ஐசக் பாஷேவிஸ் சிங்கரின் கூற்று விலங்கு வன்கொடுமை–யூதப் பெருமினவழிப்பு ஒப்பீட்டு விவாதங்களில் முதன்மைக் கூற்றாகச் சுட்டப்படுகிறது.[1]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள் தரவுகள்

தொகு
  1. Patterson, Charles (2002). Eternal Treblinka: Our Treatment of Animals and the Holocaust. New York, NY: Lantern Books, pp. 181–188.
  2. Spiro, Amy (17 July 2018). "Natalie Portman pays vegan tribute to Isaac Bashevis Singer". Jerusalem Post. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  3. Willoughby, Brian (March 7, 2003). "PETA Turns Holocaust into Pig Pen". Tolerance.org. Southern Poverty Law Center. Archived from the original on August 20, 2006.

மேலும் படிக்க

தொகு