வில்பிரட் ரெபிம்பஸ்
வில்பிரட் ஜெரால்ட் ('வில்ஃபி') ரெபிம்பஸ் ( 2 ஏப்ரல் 1942 - 9 மார்ச் 2010) ஒரு மங்களூரிய பாடகர், பாடலாசிரியர், மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். கொங்கனின் குக்கூ ( பாடல் பறவை ) என்று பொருள்படும் கொங்கன் கோகுல் என்று அவர் மறுபெயரிட்டு அழைக்கப்படுகிறார். [1] அவர் மறைந்த லேண்டலின் ரெபிம்பஸ் மற்றும் மறைந்த மாக்டலின் மென்டோன்கா ஆகியோரின் பெருமைமிக்க மகன் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்
தொகுமங்களூர் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த வில்பி, 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மங்களூரில் லேண்டலைன் ரெபிம்பஸ் மற்றும் மாக்டலின் மென்டோன்கா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை கேரளாவில் உள்ள கன்ஹங்காட்டை சேர்ந்தவர், தாய் கோவாவை சேர்ந்தவர். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால், இயல்பாகவே இசையிலும் பாடுவதிலும் சிறுவயதிலேயே பயிற்றுவிக்கப்பட்டார்.
வில்பி தனது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை மங்களூரில் உள்ள மிலாகிரெஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், அவர் செயின்ட் ஜோசப் நாடக சங்கத்தில் பயிற்சியாளராக சேருவதற்கு முன்பு மெக்கானிக்கல் படிப்பைப் படித்தார். [2]
இசைத்திறமையின் தொடக்கம்
தொகுஅவர் தனது மாணவப் பருவத்திலிருந்தே ஒரு திறமையான பாடகராக இருந்தார்,பல்வேறு ஆன்மீக மற்றும் பொதுவான பாடல் நிகழ்வுகளில் அவர் ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். .
1956 ஆம் ஆண்டு, அவர் தனது 14 வயதிலேயேகொங்கனி பாடல்களை இயற்றி பாடினார். மற்றும் அவரது முதல் நாடகமான '''பணத்தின் உலகம்''' (Poixeancho Sonvsar) என்பதை 15 வயதிலேயே எழுதி அதை செயின்ட் ஜோசப் நாடக சங்கத்தின் மூலம் அரங்கேற்றினார்.
அவர் 1959 இல் 17 வயதில் '''யுனைடெட் யங்ஸ்டர்ஸ் மியூசிக் பார்ட்டி''' என்ற இசைக் குழுவை நிறுவினார். இது தற்போது பெயர்மாற்றம் செய்யப்பட்டு யுனைடெட் யங்ஸ்டர்ஸ் கல்ச்சுரல் அசோசியேஷன் என்று அழைக்கப்படுகிறது.
மற்ற நடவடிக்கைகள்
தொகுவில்பி தனது பள்ளி நாட்களில் பாடுவதை போலவே, ஒரு சிறந்த, கபடி விளையாட்டு வீரராகவும் இருந்தார். [3]
இசை வெளியீட்டில் புதுமை
தொகுநவீன கொங்கனி இசையை தனது தனித்துவமான இசையமைப்பாலும், பாடும் பாணியாலும் புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர். தாயின் அன்பு, தந்தையின் பதற்றம், இளமையின் காதல், குழந்தைகளின் உல்லாசம், திருமணம் போன்ற பல சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் பாடல்களை எழுதினார். சுமார் நான்கு தசாப்தங்கள் நீடித்த ஒரு வாழ்க்கையில், வில்ஃபி ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார் மற்றும் மொத்தம் 248 வில்ஃபி நைட்ஸ்களை அரங்கேற்றினார்.
அவர் சுமார் நாற்பது இசைத்தொகுப்புகள், ஆறு பக்தி இசைத்தொகுப்புகள் மற்றும் ஒரு இசைக்கருவிகளின் இசைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
அவரது கவிதைப் படைப்புகளில் விஞ்சனர் போடம் (ஒன்பது தொகுதிகள்), கோகுல் கைதா (இரண்டு தொகுதிகள்), மற்றும் ஆடியோ கேசட்டுகள் மற்றும் இசைத்தொகுப்புகள் (மொத்தம் 47) ஆகியவை அடங்கும். [4] இவை போக நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார்.
2002 இல் அவரது 60வது பிறந்தநாளில், வில்பி ரெபிம்பஸ் எழுதிய பாடல்களின் மூன்றாவது பதிப்பான கோகுல் கௌதா (தி கோயல் சிங்ஸ்) மறுபடியும் வெளியிட திட்டமிடப்பட்டது, மேலும் ரெபிம்பஸுக்கு ஒரு முழு இதழை அர்ப்பணித்த பாய்ன்னாரியின் சிறப்புப் பதிப்பும் வெளியிடப்பட்டது. [5] மேலும் 1971 இல் தனது முதல் இசை நிகழ்ச்சியை நிகழ்த்தினார் [5] அவரது நூறாவது நிகழ்ச்சி 1989 ம் ஆண்டு நடைபெற்றது ஆனால் அவரது இருநூறாவது நிகழ்ச்சி 1999 ம் ஆண்டில் நிகழ்ந்தது. [5] 2002 ஆம் ஆண்டு நிலவரப்படி, பல்வேறு கொங்கனி திரைப்படங்களுக்கு இசை மற்றும் பாடல்களை இயற்றியதைத் தவிர, கிட்டத்தட்ட 2500 பாடல்களை எழுதியவர், 33 ஒலியிசை தட்டுகள் மற்றும் ஆறு பக்திப் பாடல்களை தயாரித்தவர் என்ற பல பெறுமைக்கு சொந்தக்காரர். [5] மேலும் அவர் ஒன்பது நாடகங்களை எழுதினார், அவற்றில் சில அகில இந்திய வானொலியின் மங்களூர் நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டன. [5]
கொங்கன் கோகுல் தலைப்பு
தொகு26 செப்டம்பர் 1971 அன்று மறைந்த மங்களூர் பிஷப் பாசில் டிசோசாவால் அவருக்கு கொங்கனின் குக்கூ (பாடல் பறவை) என்று பொருள்படும் கொங்கன் கோகுல் என்ற பட்டம் வழங்கப்பட்டது [6]
விருதுகளும் பாராட்டுகளும்
தொகுமங்களூரை தளமாகக் கொண்ட கொங்கனி கலாச்சார அமைப்பான மாண்ட் சோபன், 2009 ஆம் ஆண்டு, "கொங்கனி இசையில் அவரது இணையற்ற பங்களிப்பிற்காக" ரெபிம்பஸுக்கு கொங்கனி இசை வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக அறிவித்தது. [7]
முன்னாள் கர்நாடக முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி ரெபிம்பஸை "அவரது திறமை ஒப்பிடமுடியாதது; அவரது மரபு இணையற்றது. ரெபிம்பஸ் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சகாப்தத்தை உருவாக்குபவர்." என்று புகழ்ந்துள்ளார். [8]
2013 ஆம் ஆண்டு உட்பட அவரது பெயரில் பாட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது.[9]
ஆய்வறிக்கை
தொகுவில்ஃபி ரெபிம்பஸின் படைப்புகள் மூலம் கொங்கனி இசை மற்றும் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து பெங்களூரு, கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்டனி மவ்ரல் லோபோ, ஜூலை 2019 இல் ஒரு ஆய்வறிக்கையை எழுதியுள்ளார். [10] அதில், "கொங்கனி சாகித்ய அகாடமி நடத்திய ஆய்வின்படி, மங்களூரில் கொங்கனியின் 42 பேச்சுவழக்குகள் உள்ளன, அங்கு மக்கள் ஒரே மொழியை சில வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தி பேசுகிறார்கள்" என்று வாதிடுகிறார். [10]
மீனா கிரேசியா ரெபிம்பஸ்
தொகுவில்பி 25 ஜனவரி 1970 இல் பிரபல பாடகியான மீனா கிரேசியா ரெபிம்பஸை மணந்தார். 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பெனார் புரொடக்ஷன்ஸ் மூலம் மீனா கிரேசியாவின் இனிமையான குரலுக்காக மற்றொரு பிரபலமான பாடும் பறவையின் பெயரால் கொங்கன் கோகுல் என்பதை போல இவருக்கு கொங்கன் மைனா என்ற பட்டம் வழங்கப்பட்டது.
மீனா கிரேசியஸ் ரெபிம்பஸ், வில்ஃபியின் ஆல்பங்களில் சில பாடல்களை இயற்றி பாடியுள்ளார், மேலும் நச் தோ கா வேதா, ஆஷா மற்றும் குஹு குஹூ போன்ற பாடல்கள் வில்பியின் மரணத்திற்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இருந்தது.
குடும்ப வாழ்க்கை
தொகுவில்பி மற்றும் மீனா இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர், மூத்தவர் வீணா ரெபிம்பஸ் பைஸ் மற்றும் இளையவர் விஸ்வாஸ் ரெபிம்பஸ். அவர்களும் பல்வேறு பாடல்களை பாடி இசையமைத்து, தந்தையின் வழியை பின்பற்றுகிறார்கள்., மேலும் 2011 தும் மக ஹவ் துகா ஆல்பத்தை வெளியிட்டதன் மூலம் தங்கள் தந்தையின் பாரம்பரியத்தைத் தொடர்ந்தனர்.
13 ஜூன் 2010 அன்று, பிஷப் டாக்டர். அலோசியஸ் பால் டிசோசா, மங்களூருவில் உள்ள முக்கிய மிலாகிரெஸ் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, கொங்கன் கோகுல் வில்பி ரெபிம்பஸுக்கு, போப் பெனடிக்ட் XVI அவர்களால் வழங்கப்பட்ட திருச்சபை சார்பு (Pro Ecclesia Et Pontifice) என்ற பட்டத்தை அவரது மரணத்திற்குப் பின் வழங்கினார். வில்ஃபிக்கு கத்தோலிக்க தேவாலயத்தின் மீதான அன்பு மற்றும் உலகளவில் கொங்கனி சமூகத்திற்கு அவர் ஆற்றிய அசாதாரணமான இசைப் பங்களிப்புகளுக்காக இந்த சிறப்பு மரியாதை வழங்கப்பட்டுள்ளது. பிஷப் அந்த பட்டத்தை அவரது மனைவியான மீனா ரெபிம்பஸிடம் ஒப்படைத்தார்.
நோய் மற்றும் இறப்பு
தொகுவில்ஃபி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, செப்டம்பர் 2009 இல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் [11]
அவர் 9 மார்ச் 2010 அன்று நுரையீரல் புற்றுநோயின் சிக்கல்களால் இறந்தார் [12] 67 வயதில் அவர் இறந்த பிறகு, அவரது உடல் மார்ச் 11, 2010 அன்று மங்களூருவில் உள்ள ஜெப்புவில் உள்ள செயின்ட் ஜோசப் செமினரி தேவாலயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது [13] அவர் ஜெப்பு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [13] அவருக்கு மனைவி மீனா, மகள் வீணா, மருமகன் ஆர்தர், மகன், விஸ்வாஸ், மருமகள் சார்லின், பேரக்குழந்தைகள் அர்வின், அண்ணா ஆகியோர் உள்ளனர். [13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mangalore: 'Konkan Kogul' Wilfy Rebimbus (67) Ceases to Sing".
- ↑ "Wilfy Rebimbus - Profile". www.wilfyrebimbus.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
- ↑ "Konkani Musician, Lyricist and Singer Wilfy Rebimbus passes away". http://www.mangaloretoday.com/mt/index.php?action=mn&type=655.
- ↑ "Wilfy Rebimbus". www.kavitaa.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "Konkani poet Wilfy Rebimbus turns 60 today | Bengaluru News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Apr 2, 2002. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
- ↑ "Late Singer Wilfy Rebimbus honoured with Papal honour | Mega Media News English". பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
- ↑ "Lifetime award for Wilfy Rebimbus | Mangaluru News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Apr 11, 2009. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
- ↑ "'Wilfy Rebimbus was an epochmaker'". Deccan Herald (in ஆங்கிலம்). 2010-03-22. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
- ↑ admin (7 November 2013). "Mangalore: Wilfy Rebimbus Singing Contest on Nov 3 & 17 | Bangalore First" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
- ↑ 10.0 10.1 "Representation of Konkani music and culture through the works of Wilfy Rebimbus | Request PDF". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
- ↑ "Konkani singer Wilfy Rebimbus no more". Deccan Herald (India). 9 March 2010. http://www.deccanherald.com/content/57220/konkani-singer-wilfy-rebimbus-no.html. பார்த்த நாள்: 29 August 2010.
- ↑ "Wilfy Rebimbus : The Legend has Left us All...". http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=73558&n_tit=Wilfy+Rebimbus+:+The+Legend+has+Left+us+All...++.
- ↑ 13.0 13.1 13.2 "Obituary - Wilfy Rebimbus (67), Jeppu, Mangalore". www.daijiworld.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.