வில்லவர் (Villavar) பண்டைய இந்தியாவின் தெற்குப் பகுதியான தமிழகத்தில் வசித்து வந்த வேட்டைக்காரர்கள் வில்லவர் என அழைக்கப்பட்டனர். வில்லவர் என்ற சொல் வில் ( ஆயுதம் ) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து உருவானது. வில்லவர்கள் பெரும்பாலும் மலையடிவாரங்களிலும் காடுகளிலும் வாழ்ந்தனர். [1]. சேர மன்னர்கள் வில்லவன் என்ற தலைப்பு பெயரைப் பயன்படுத்தினர். [2][3] பிற்கால சேர வம்சத்தின் நிறுவனர் குலசேகரர் தன்னை "வில்லவர் கோன்", வில்லவர்களின் மன்னன் என்று அழைத்துக் கொண்டார். [4].

பதிற்றுப்பத்து நூலில் கூறப்பட்டுள்ள சேர மன்னர்களின் வாழ்வியல் முறை மற்றும் தாய் வழி மரபை ஈழவர்,தீயர்,இல்லத்தார் ,இல்லத்துப்பிள்ளை,பில்லவா,ஈடிகா என்ற பெயர் கொண்ட சமுதாயத்தில் பின்பற்றுகின்றனர் இவர்கள் தங்களை சேர வில்லவர் வம்சத்தினராக கருதுகின்றனர்..


இவர்கள் அனைவரும் தங்களின் குருவாக ஸ்ரீ நாராயண குருவை பின்பற்றுகின்றனர்...

மேற்கோள்கள் தொகு

  1. V. Kanakasabhai (1904). The Tamils Eighteen Hundred Years Ago. Asian Educational Services. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0150-5.
  2. Hudson, D. Dennis (2008-09-25). The Body of God: An Emperor's Palace for Krishna in Eighth-Century Kanchipuram (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780190451400.
  3. Aiyangar, Sakkottai Krishnaswami (2004). Ancient India: Collected Essays on the Literary and Political History of Southern India (in ஆங்கிலம்). Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120618503.
  4. kolli kAvalan villavar kOn * sEran kulasEkaran mudi vEndhar sigAmaNiyE பெருமாள் திருமொழி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லவர்&oldid=3877750" இலிருந்து மீள்விக்கப்பட்டது