வில்லியம் இசுக்கீன்

வில்லியம் இசுக்கீன் (William Skeen) என்பவர், ஒரு ஆங்கிலேயர். 19 ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய ஆட்சியில் இருந்த இலங்கையில், பலராலும் அறியப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். 1822 ஆம் ஆண்டில் இலண்டனில் பிறந்தார். 1849 ஆம் ஆண்டில் இலங்கையில் அரசாங்க அச்சகராக நியமிக்கப்பட்டார்.[1] "இவர் அடம்ஸ் பீக்" (Adam's Peak), "த நக்கிள்ஸ்" (The Knuckles) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய நூல்களில் தொடக்ககால அச்சுக்கலை குறித்த ஆங்கில நூல் (Early Typography) முக்கியமானது. இவரது குடும்பத்தினர் 19 ஆம் நூற்றாண்டு இலங்கையின் பண்பாடு, வரலாறு, சமூகம் போன்றவை தொடர்பில் ஏராளமான ஒளிப்படங்களை எடுத்தனர். இவற்றுட் பல அக்கால நிலைமைகளை விளக்கும் சான்றுகளாக இன்றும் விளங்குகின்றன.

வில்லியம் இசுக்கீன்
பிறப்புWilliam Louis Henry Skeen
(1847-07-01)1 சூலை 1847
இலண்டன்
இறப்பு26 சனவரி 1903(1903-01-26) (அகவை 55)
பிரித்தானிய இலங்கை
தேசியம்British
கல்விLondon School of Photography
அறியப்படுவதுPhotography
Blossoms and fruit of a coffee, Coffea arabica
பிராமணர், a fakir and figures of a மயில் and the god Siva

இலங்கையில் ஒளிப்படக்கலையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய ஜே. பார்ட்டிங் என்பவர் நடத்திவந்த ஒளிப்பட நிறுவனத்தை வில்லியம் இசுக்கீன் தனது மூத்த மகன் வில்லியம் லூயிசு என்றி இசுக்கீனுக்காக விலைக்கு வாங்கினார். வில்லியம் லூயிசு என்றி இலண்டனில் ஒளிப்படக்கலை பயின்றவர். வில்லியம் இசுக்கீனின் இரண்டாவது மகன் ஜி. ஜே. ஏ. இசுக்கீன் தந்தையின் வழியில் 1881 ஆம் ஆண்டு அரசாங்க அச்சகரானார். எப். இசுக்கீன் இவரது இன்னொரு மகன்.

மூலம்

தொகு
  1. "RCS Photograpghes Index". Archived from the original on 2014-08-28. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_இசுக்கீன்&oldid=3571789" இலிருந்து மீள்விக்கப்பட்டது