வில்லியம் உலோவர்
சர் வில்லியம் உலோவர் (Sir William Lower) (1570 – 12 ஏப்பிரல் 1615)[1] ஓர் ஆங்கிலேய வானியலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தொடக்கநிலைத் தொலைநோக்கிக் காலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் கார்ன்வாலில் பிறந்தார். இவர் ஆக்சுபோர்டு எக்சீட்டர் கல்லூரியில் படித்து முடித்ததும் திருமணம் செய்து கொண்டு தென்மேற்கு வேல்சில் வாழ்க்கையில் ஈடுபட்டார். இவர்1607 இல் ஏலி வால்வெள்ளியைக் கண்ணுற்று, கவனமாகப் பல அளவைகளை எடுத்துள்ளார் இவர் அந்த வால்வெள்ளி வளிமண்டல நிகழ்வைப் போல நேர்க்கோட்டில் இயங்காமல் வளைந்த வழித்தடத்தைப் பின்பற்றுவதைப் பற்றி தாமசு ஆரியத்துக்கு எழுதியுள்ளார். . இதன் வட்டணை கெப்ளர் விதிகளைப் பின்பற்றுவதையும் கண்டுள்ளார்.
இவர் ஆரியத் தந்த தொலைநோக்கிவழியாக பல நிலா நோக்கீடுகளை எடுத்தார். இவர் நிலாவின் மேற்பரப்பு ஒழுங்கற்று இருப்பதைக் குறிப்பிட்டார். முதிர்வற்ற தன் சமையல்காரான் "போன வரம் சுட்ட தோசையைப் போல்" உள்ளது எனவும் நிலாத் தரையை உருவ்கித்துள்ளார் " இதையொத்த நோக்கீடுகளைச் சில வாரங்களுக்குப் பிறகு கலீலியோ வெளியிட்டார்.
இவர் 1601 இல் போதுமின் பாராளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு, 1604 முதல் 1611 வரை இலாசுட்டுவிதியேல் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1603 இல் மாவீரர் பட்டம் பெற்றார்.[2]
இவர் தாமசு பெரோத், நார்த்தம்பர்லாந்து அரசி தோரத்தி பெர்சி ஆகியவர்களுக்கு மகளாகிய பெனெலோப்பு பெரோத்தை மணந்தார். இவர் பெனெலோப்பு வழி மூன்று ஆண்மக்களையும் ஒரு பெண்மகவையும் பெற்றார்.[3][4][5] உலோவர் இறப்புக்குப் பின்னர், பெரோத் அனப்பட்ட பெனெலோப்பு இரண்டாவதாக, இராபெர்ட்டு நாவுன்ட்டனை மணந்து அவர்வழி ஒரு மகளைப் பெற்றெடுத்தார். அந்த மகள் ஐந்தாம் பெம்பிரோக் கோமான் பிலிப் எர்பெர்ட்டை மணந்தார்..
குறிப்புகள்
தொகு- ↑ Jones, Bryn. "Sir William Lower". Archived from the original on 5 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Alumni Oxoniensis 1500-1714 "Lower, (Sir) William, of Cornwall, gen. fil. EXETER COLL., matric. 10 June 1586, aged 16; of Treventy, co. Carmarthen, astronomer; student of Middle Temple 1589 (as son and heir of Thomas, of Winnow, Cornwall, esq.); knighted at Theobalds 11 May 1603; M.P. Bodmin 1601, Lostwithiel 1604-11; died 12 April 1615; brother of Alexander and Nicholas; father of Thomas 1643."
- ↑ Lower, Sir William (c.1570-1615), of St. Winnow, Cornwall and Trefenti (Tra'Venti), Llanfihangel Abercowin, Carmarthenshire, History of Parliament Retrieved 19 August 2013.
- ↑ Trefenty, Dyfed Archaeological Trust Retrieved 19 August 2013.
- ↑ Roche 2004.
மேற்கோள்கள்
தொகு- Roche, J.J. (2004). "Lower, Sir William (c.1570–1615)". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/39195. (Subscription or UK public library membership required.)