வில்லியம் திரேசி

வில்லியம் திரேசி (1807 - 1877) என்பவர் ஒரு கிறித்தவ மத போதகர். இவர் அமெரிக்காவில் கனெடிகட் மாகாணத்தில் பிறந்தவர். இவர் கிறித்தவ வேத சாத்திரங்களைக் கற்று 1837-ல் இந்தியா வந்து பணியாற்றினார். மதுரை மாவட்டம், திருமங்கலம், பசுமலை ஆகிய ஊர்களில் பணிபுரிந்தார். இவர் பணியின் போது 32 சபைகளை உருவாக்கினார். இவர் எழுதிய “வேதாகம பிரசித்த விருத்தாந்தம்” எனும் நூல் 1888 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_திரேசி&oldid=1934556" இருந்து மீள்விக்கப்பட்டது