வில்லியம் பாஃபின்
வில்லியம் பாஃபின் (William Baffin, அண். 1584 – 23 சனவரி 1622) ஆங்கிலேய மாலுமியும் தேடலியலாளரும் ஆவார். அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து அமைதிப் பெருங்கடலுக்கு வடமேற்குப் பெருவழியைக் கண்டறிய முனைந்ததற்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இந்த முயற்சியின் போது தற்கால கனடாவின் பாஃபின் விரிகுடாவைக் கண்டறிந்த முதல் ஐரோப்பியராக விளங்குகிறார். தவிரவும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்காக செங்கடல், பாரசீக வளைகுடா பகுதிகளைச் சிறப்பாக அளந்தவராகவும் அறியப்படுகின்றார்.
வில்லியம் பாஃபின் | |
---|---|
பிறப்பு | அண். 1584 இலண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 23 சனவரி 1622 இக்வேசம், ஓர்மசு |
தேசியம் | ஆங்கிலேயர் |
பணி | மாலுமி, தேடலியலாளர் |