வில்லியம் மார்க்கோவிட்சு
வில்லியம் மார்க்கோவிட்சு (William Markowitz) (பிப்ரவரி 8, 1907, மெல்சு, ஆத்திரிய சிலேசியா– அக்தோபர் 10, 1998, பொம்பனோ கடற்கரை, புளோரிடா) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் முதன்மையாக, நேர அளவையின் செந்தரமாக்கத்துக்காகப் பெயர்பெற்றவர்.
இவரது தாயார் ஆத்திரியா சிலேசியாவின் ஒப்பாவா மாவட்ட வித்கோ அருகில் உள்ள செல்சு நகருக்கு (இப்போது செக் குடியரசில் உள்ள இடம்) வந்தபோது வில்லியம் பிறந்துள்ளார். இந்தப் போலந்துக் குடும்பம் 1910 இல் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து சிக்காகோ நகரத்தில் குடியேறியது
வில்லியம் 1931 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வில்லியம் தங்கன் மேக்மில்லன் வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் ஐக்கிய அமெரிக்க நாவாய் வான்காணகத்தில் 1936 இல் சேரும் முன் பெனிசிவேனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பித்துள்ளார். அப்போது இவர் காலச் சேவை துறையில் பவுல் சோலன்பெர்கர், ஜெரால்டு கிளெமான்சு ஆகியோரின் கீழ் பணிபுரிந்துள்ளார்.
இவர் உருரோசாலின் சுலிம்சனை மணந்த பிறகு, 1943 இல் அத்துறையின் இயக்குநர் ஆனார். இவர் [[ephemeris tim அளவுகோலை உருவாக்கினார். இதைப் பன்னாட்டுக் காலச் செந்தரமாக 1952 இல் பன்னாட்டு வானியல் ஒன்றியம் ஏற்பதற்கு, 1948 ஆம் ஆண்டைய ஜெரால்டு கிளெமான்சின் பரிந்துரை வழிவகுத்தது.[1]இவர் இங்கிலாந்தில் புதிதாக உருவாக்கிய அணுக்கடிகாரங்களைத் தான் உருவாக்கிய புதிய நேரஞ்சார் நொடிப்டியைப் பயன்படுத்தி, உலூயிசு எசனுடன் இணைந்து தரஅளவீடு செய்துள்ளார். சீசியம் அணுக்கடிகாரங்களின் அடிப்படை அலைவெண் 9,192,631,770 ± 20Hz என இருவரும் தீர்மானித்தனர். இது பன்னாட்டளவில் நொடியை வரையறுக்க பயன்பாட்டில் 1967 வரை இருந்தது. டப்ளினில் நடந்த 1955 ஆண்டு பன்னாட்டு வானியல் ஒன்றியக் கூட்டத்தில், பொது நேரம் மூன்று வகைகளில் வரையறுக்க ஒரு முன்மொழிவைப் பரிந்துரைத்தார்.. இவர் நேரடி நோக்கீட்டு நேரத்தை பொநே0 எனவும் முனையியக்க விளைவை நெட்டாங்குக்கு ஏற்பத் திருத்திய நேரத்தை பொநே1 எனவும் மேலும் இதைப் புவிச் சுழற்சியால் உருவாகும் பருவக் காலத்துக்கு ஏற்ப திருத்திய நேரத்தை பொநே2 எனவும் கொள்ளவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார். இந்த முறை இன்றும் ஓரளவு பயனில் நிலவுகிறது.
இவர் பன்னாட்டு வானியல் ஒன்றிய ஆணையத்தில் 1955 முதல் 1961 வரை இருந்துள்ளார். மேலும், பன்னாட்டு புவியளவை, புவியியற்பியல் ஒன்றியத்திலும் அமெரிக்க புவியியற்பியல் ஒன்றியத்திலும் நொடி வரையறைக்கான பன்னாட்டு அறிவுரைஞர் குழுவிலும் முனைப்பாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் ஐக்கிய அமெரிக்க நாவாய் வான்காணகத்தில் இருந்து 1966 இல் ஓய்வு பெற்றது, மாக்குவெட்டி பல்கலைக்கழகத்தில் 1972 வரை இயற்பியல் பேராசிரியராகவும் அதேநேரத்தில் நோவாசவுத்தீசுட்டர்ன் பல்கலைக்கழகத்தில் ஒரு பதவியிலும் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ See references (incl. citations to some of Markowitz's papers) in article Ephemeris time.
வெளி இணைப்புக்கள்
தொகு- US Navy obituary பரணிடப்பட்டது 2016-05-10 at the வந்தவழி இயந்திரம்