வில்லியம் ரீசு
வில்லியம் ரீசு (William Rees) (பிறப்பு: டிசம்பர் 18, 1943) பிரித்தானிய கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் ஆவார். இவர் அப் பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் பிரதேசத் திட்டமிடல் கல்லூரியின் முன்னாள் நெறியாளரும் ஆவார். 1969-70 ஆம் ஆண்டிலிருந்து இப் பல்கலைக்கழகத்தில் கற்பித்து வரும் இவரது முதன்மை ஆர்வம் பேண்தகுநிலைச் சமூக பொருளியல் வளர்ச்சிக்கான சூழலியல் நிலைமைகள், உலக சூழல்சார் போக்குகள் என்பவை சார்ந்த பொதுத்துறைக் கொள்கை, திட்டமிடல் என்பவை தொடர்பானது ஆகும். சூழலியல் அடித்தடம் என்னும் கருத்துருவை உருவாக்கியதுடன், அதைக் கணிக்கும் வழிமுறைகளை உருவாக்கியதிலும் இவர் பெரும்பங்கு வகித்தார்.
வில்லியம் ரீசு | |
---|---|
பிறப்பு | டிசம்பர் 18, 1943 |
கல்வி | முனைவர் மக்கள்தொகைச் சூழலியல் |
பணி | கல்வியாளர் |
அறியப்படுவது | சூழலியல் அடித்தடம் என்னும் கருத்துருவை உருவாக்கியமை |
பட்டம் | பேராசிரியர் |
பிள்ளைகள் | இசுட்டீபன், லியாம் |
வெளியிணைப்புக்கள்
தொகு- சமூக மற்றும் பிரதேசத் திட்டமிடல் கல்லூரி, கல்விப் பணியாளர் விபரங்கள். பரணிடப்பட்டது 2005-11-16 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- முனைவர் வில்லியம் ரீசுடன் நேர்காணல் (ஆங்கில மொழியில்)
- புவியில் புத்திக்கூர்மை உள்ள உயிரினங்கள் உள்ளனவா (Is There Intelligent Life on Earth)? பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம் எட்மண்டனில் உள்ள பார்க்லாந்து நிறுவன மாநாட்டில் நிகழ்த்திய உரை, நவம்பர் 2000. (ஆங்கில மொழியில்)