வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோயில்
அகத்தீசுவரர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]
வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவு: | வில்லிவாக்கம் |
ஏற்றம்: | 60 m (197 அடி) |
ஆள்கூறுகள்: | 13°06′19″N 80°12′23″E / 13.105150°N 80.206390°E |
கோயில் தகவல்கள் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′19″N 80°12′23″E / 13.105150°N 80.206390°E ஆகும்.
இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் (செவ்வாய் தோசம் நீக்கும்) கோயில்களில் ஒன்றாகும்.[2]
அகத்திய முனிவர் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்ட தலங்களில் ஒன்றான இக்கோயிலில், பெண்கள் செவ்வாய் கிழமைகளில் பெருந்திரளாக வந்து செல்கின்றனர்.[3]
சுமார் ஐநூறு ஆண்டுகள் தொன்மையான கோயில் என்ற வரலாற்று சிறப்பு மிக்கது இவ்வாலயம்.[4]
இறைவி சொர்ணாம்பிகை சமேத மூலவராக இறைவன் அகத்தீசுவரர் வீற்றிருக்கும் இக்கோயிலின் தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.[5] இந்த தீர்த்தத்தின் கரையில் அங்காரகன் (செவ்வாய்) காட்சியளிப்பதால், 'செவ்வாய் கோயில்' என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.[6]
பொதுவாக, ஒரு கோவிலின் நுழைவாயில் கிழக்கு நோக்கி இருக்கும்; ஆனால் இந்தக் கோவிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது.[7]
இக்கோயிலின் இறைவன், இறைவியுடன் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சியருளியது ஓர் ஆடி மாதம் செவ்வாய் கிழமை என்று கருதப்படுவதால், ஆடி மாதம் செவ்வாய் அன்று வழிபாடு சிறப்புடையதாகும் என்று நம்பப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஶ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ "Arulmigu Agatheeswara Swamy Temple, Villivakkam, Chennai - 600049, Chennai District [TM000317].,Chevvai temple, Angaraka Kshethram". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ மாலை மலர் (2019-08-06). "சென்னை பெண்களின் மனம் கவர்ந்த செவ்வாய் கோவில்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ "500 ஆண்டு கால புராதான சிறப்பு மிக்க வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆலய வரலாறு!". www.toptamilnews.com. 2020-07-21. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ "Agastheeswarar Temple : Agastheeswarar Agastheeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ ValaiTamil. "அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ "Villivakkam Agastheeswarar Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
- ↑ Suriyakumar Jayabalan. "ஆடி செவ்வாய் வழிபாடு - அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.