வில்ஹெல்ம் வான் பியெலா

வில்ஹெம் வான் பியெலா (Wilhelm von Biela, இடாய்ச்சு மொழி: Wilhelm Freiherr von Biela; மார்ச் 19, 1782 - பெப்ரவரி 18, 1856) என்பவர் செருமானிய-ஆத்திரிய இராணுவ அதிகாரியும், தொழில்முறையல்லாத வானியலாளரும் ஆவார்.[1]

பாரன் வில்லெம் வான் பியெலா
Baron Wilhelm von Biela
பிறப்புமார்ச்சு 19, 1782(1782-03-19)
இறப்புபெப்ரவரி 18, 1856(1856-02-18) (அகவை 73)
தேசியம்செருமன், ஆத்திரியர்
அறியப்படுவதுபியெலாவின் வால்வெள்ளி

இளமையும் படைப்பணியும்தொகு

வில்லெம் வான் பியெலா (வடக்குசெருமனியைச்) சேர்ந்த ஃஆர்சு நகரத்து [[உரோசுலாவில் பிறந்தார். இன்று செக் குடியரசுவாக உள்ள பகுதிசார்ந்த புரோட்டசுடண்டு உயர்குடியின் வாரிசாவார். இக்குடும்பம் செக்சனிக்குச் சமயப் போர்களின்போது 1621இல் குடும்பத் தலைவர் ஃபிரெடெரிக் வான் பியெலா தூக்கில் இடப்பட்டதும் நாடு கடத்தப்பட்டுள்ளது..[1] பியெலா மட்டுமே அவரது குடும்பக் கடைசி வாரிசாக எஞ்சியுள்ளார்.[2]

பியெலா டிரெசுடனில் உள்ள படைப்பயிற்சிக் கல்லூரியில் படித்து முடித்ததும், ஆத்திரியப் படையில் 1802இல் சேர்ந்தார். இவர் கிராஃப் சுட்டுவார்ட் எண் 18 எனும் காலாட்படையில் படைவீர்ராகச் சேர்ந்து விரைவிலேயே கேப்டன் பதவிக்கு உயர்ந்துள்ளார். பலபோர்களில் 1805,1809களில் நெப்போலியனை அவர்களை எதிர்த்துப் போர்புரிந்துள்ளார் . பிறகு 1813இல் மெர்வெல்டிட் படைப்பொதுமேலர் தலைமையில் இணைமேலராக இலெப்சிக் போரில் பங்கேற்றுள்ளார். இங்கு இவர் போரில் காயமுற்றுள்ளார்.[3]

பியெலா 1815இல் பிரேகு நகருக்குச் சென்று, மாரின் அலாயிசு டேவிட் அவர்களிடம் வானியலைப் பயின்றார்.[1] பிறகு [[இத்தாலியில் பணிபுரிந்துள்ளார். அப்போது இவர் உரோவிகோ நகரின் படைஆணையராகப் பணியமர்த்தப்பட்டுள்ளர்.[4]

வானியல் பங்களிப்புகள்தொகு

வானியலில் இவர் வால்வெள்ளி வட்டணைகளை நோக்குவதிலும் கணித்தலிலும் வல்லமை பெற்றுள்ளார்s. இவர் சூரியக் கரும்புள்ளிகள் ஆய்விலும் ஈடுபட்டு Astronomische Nachrichten என்ற இதழில் தொடர்க்கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றில் சூரியனை நோக்கி வீழும் வால்வெள்ளிகளைப் பற்றிய கோட்பாட்டுநிலைக் கட்டுரைகளும் டைக்கொ பிராகி பற்றியனவும் நிலவால் ஏற்படும் விண்மீன்ஒளிமறைப்புகளைப் பற்றியனவும் அடங்கும்.[4] இவர் 1836இல் கொள்சுழற்சி குறித்த பெருநூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். Die zweite grosse Weltenkraft, nebst Ideen über einige Geheimnisse der physischen Astronomie, oder Andeutungen zu einer Theorie der Tangentialkraft என்ற அந்நூலின் முன்னுரையில் இதை எழுத எனக்கு பல்லாண்டுகள் பிடித்தாலும் அரைமணி நேரத்தில் படித்து முடித்துவிடலாம் என்கிறார்.

தகைமைதொகு

1826இல் 6.6 ஆண்டு காலக் குறுகிய இடைவெளிக்குள் இரு வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார். இதில் ஒன்று ஏற்கெனவே கண்டறியப்பட்ட 1823 பெரு வால்வெள்ளி, சி/ 1823Y1) ஆகும்./[4] இவர் மட்டுமே கண்டறிந்த மற்றொரு வால்வெள்ளி இவருடைய பெயரால் பியெலாவின் வால்வெள்ளி என அழைக்கப்பட்டது. 1845இல் பியெலா வால்வெள்ளி மீண்டும் வந்தபோது அது இரண்டாகப் பிரிந்திருந்தது. அதைக் கடைசியாகப் பார்க்கமுடிந்தது 1852இல் தான். அதற்குப் பிறகு அது உடைந்து சிதறியிருக்கவேண்டும். ஏனெனில் 1872 இல் அதைக் கண்ணுற்றபோது விண்கல்பொழிவாக மாறி உலகையே உணர்ச்சிவயப்படச் செய்தது. இப்பொழிவை இன்னமும் அந்திரொமேடா பால்வெளியில் நவம்பர் மாதங்களில் கண்ணுறலாம். இவை பியெலிடுகள் என்றோ ஆந்திரமேடிடுகள் என்றோ அழைக்கப்படுகின்றன.

நிலாவில் உள்ள பியெலா என இவர் பெயரைத் தாங்கியுள்ளது.

சொந்த வாழ்க்கைதொகு

இவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி முழு விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை: இவர் அன்னா (Edle வான் வாலென்சுட்டெர்ன்) என்பவரை மணந்துள்ளார். இவர்களுக்கு எமிலி ஃபிரீன் வான் பியெலா என்ற மகள் 1820இல் பிறந்துள்ளார். இவர்களின் மகள் ஆசுத்திரியக் காலாட்படை அலுவலரான Rovigo to Moritz, கிராஃப் ஃபோர்காக் என்பவரை மணந்து இரு குழந்தைகளைப் பெற்றுள்ளார்.[5][2]

பியெலா 1840களில் ஓய்வு பெற்று வெனிசுக்குச் சென்று அங்கே இவர் 1856இல் இறந்துவிட்டார்.


மேலும் படிக்கதொகு

Mayerhofer, Josef (1970–80). "Biela, Wilhelm von". Dictionary of Scientific Biography 2. நியூயார்க்: Charles Scribner's Sons. 125-126. ISBN 978-0-684-10114-9. 

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 Solc, M. "History of the comet 3D/Biela" in Electronic supplement to Dissertatio cum Nuncio Sidereo, Series Tertia, No. 7 – 22 August 2006
  2. 2.0 2.1 von Wurzbach, C. Biographisches lexikon des kaiserthums Oesterreich, vol 1, K. K. Hof- und staatsdruckerei, 1856, p.390
  3. Wurzbach, p.389
  4. 4.0 4.1 4.2 Frommert, Comet 3D/Biela, seds.prg
  5. Kneschke, E. Deutsche Grafenhäuser der Gegenwart, v3, Weigel, 1854, p.128