முதுவர்
இந்தியப் பழங்குடிகள்
முதுவர் எனப்படுவோர் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் வாழ்கிற ஒரு பழங்குடியினர் ஆவர். இவர்களில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலுள்ள மலைப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாண்டிய நாட்டுத் தமிழர் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் மதுரை மீனாட்சியம்மையை குலதெய்வமாக வணங்குகின்றனர். காடுகளின் ஊடே வாழ்வது இவர்தம் இயல்பு. வேட்டையாடுவதிலும், கம்பு, கேழ்வரகு, ஏலக்காய் ஆகியவற்றைப் பயிர் செய்வதிலும் தேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி பேச்சுத் தமிழின் கிளை மொழிகளுள் ஒன்றாக உள்ளது.[1]