விளிம்புவிளைவுக் கீற்றணி

விளிம்புவிளைவுக் கீற்றணி என்பது ஒளியின் நிறப்பிரிகையினால் நிறமாலையைப் பெற உதவும் ஓர் கருவி;[1] இது அதிக எண்ணிக்கையிலான, சமதூரத்தில் அமைந்த, இணையான பிளவுகளால் ஆன ஓர் அமைப்பு. ஒளியின் விளிம்புவிளைவு பற்றி அறியப் பயன்படுகிறது. இவ்விளைவைக் காண கீற்றணியின் தளத்தில் படும் ஒளியின் அலைநீளமானது பிளவின் அகலத்திற்கு ஒப்பிடத்தக்கதாக இருத்தல் வேண்டும். கீற்றணி இரு வகைப்படும்:

  1. ஊடுருவுக் கீற்றணி.
  2. எதிரொளிப்புக் கீற்றணி.
ஒரு மிகப்பெரிய எதிரொளிப்புக் கீற்றணி

ஊடுருவுக் கீற்றணி தொகு

ஒளி ஊடுருவும் பொருளான கண்ணாடி அல்லது பெர்சுபெக்சினாலான (perspex) தகட்டில் வைர ஊசியின் உதவியால், ஒரு செ.மீ. அகலத்தில் பல்லாயிரம் வரிப்பள்ளங்கள் (கோடுகள்) கீறப்பட்டிருக்கும், ஒரு வகைக் கீற்றணி. கோடுகள் உள்ள பகுதி ஒளிபுகாத் தன்மையுடையதாயும் கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதி பிளவு போன்றும் செயல்படும். இதனுள் ஊடுருவும் ஒளி நிறமாலை வரிசைகளைத் தோற்றுவிக்கும். இந்நிறமாலையில் முதலில் ஊதா நிறமும் இறுதியில், அதாவது அதிகளவு விளக்கமடைந்து, சிவப்பு நிறமும் தோன்றும். (முப்பட்டக நிறப்பிரிகையில் சிவப்பு சிறும விளக்கமும் ஊதா பெரும விளக்கமும் அடைகின்றன என்பதை நோக்குக).

எதிரொளிப்புக் கீற்றணி தொகு

 
குறுவட்டில் குறுக்கீட்டு விளைவு

ஓர் எதிரொளிப்புத் தளம் அல்லது எதிரொளிப்புப்பூச்சு இடப்பட்ட தள / குழிவான பரப்பின் மீது சம அகலமுடைய, இணையான வரிப்பள்ளங்கள் (கோடுகள்) வரையப்பட்ட அமைப்பு. இவ்வகைக் கீற்றணிகளின் சிறப்பு அகச்சிவப்பு, புற ஊதா ஒளிகளையும் நிறப்பிரிகைக்கு உட்படுத்தும் தன்மையே. (ஊடுறுவுக் கீற்றணிகளில் இவ்விரு ஒளிகளும் ஊடுருவ முடியாது). குறுவட்டு எதிரொளிப்புக் கீற்றணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கீற்றணியின் தரம் தொகு

ஒரு கீற்றணியின் தரம் அதில் வரையப்பட்ட கோடுகளின் நேர் கோட்டுத்தன்மை, இணைப்பண்பு, கோடுகளின் சமதூரம் ஆகியவற்றைப் பொறுத்தது. சிறந்த கீற்றணிகள் கருமையான பின்னணியில் தெளிவான விளிம்புவிளைவு நிகழ்வை ஏற்படுத்த வல்லவை.

கீற்றணிச் சமன்பாடு தொகு

 

இங்கு,

  • d என்பது பிளவுகளுக்கு இடைப்பட்ட தொலைவு
  • θ என்பது விளிம்புவிளைவுக் கோணம்,
  • m என்பது நிறமாலை வரிசை
  • λ என்பது ஒளியின் அலைநீளம்

குறிப்புதவி தொகு

  • இயல்பியல் களஞ்சியம் -- தொகு. ப.க. பொன்னுசாமி -- பக். 145
  • [1] daviddarling