விளையாட்டரங்கு 974
கத்தார் நாட்டில் உள்ள விளையாட்டரங்கம்
விளையாட்டரங்கு 974 (Stadium 974) கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பிஃபா அமைப்பு நடத்தும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுவதற்காக இந்த விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று விளையாட்டரங்கு 974 திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டியை நடத்துவதற்காகவே கப்பல் கொள்கலன்களை மறுசுழற்சிக்கு உட்படுத்தி இவ்விளையாட்டரங்கம் உருவாக்கப்பட்டது. பென்விக்கு இரிபேரன் கட்டிடக் கலைஞர்கள் நிறுவனம் இந்த அரங்கை வடிவமைத்தது.[1][2] போட்டிகள் முடிந்தவுடன் விளையாட்டரங்கம் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிஃபா அமைப்பு உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே முதலாவது தற்காலிக விளையாட்டரங்கமாகும்.
முன்னாள் பெயர்கள் | இராசு அபு அபௌத் விளையாட்டரங்கம் |
---|---|
அமைவிடம் | இராசு அபு அபௌத் மாவட்டம், கத்தார் |
ஆட்கூற்றுகள் | 25°17′24″N 51°33′54″E / 25.290°N 51.565°E |
இருக்கை எண்ணிக்கை | 40,000 |
தரைப் பரப்பு | பொவேசி |
கட்டுமானம் | |
Broke ground | 2018 |
திறக்கப்பட்டது | 30 நவம்பர் 2021 |
வடிவமைப்பாளர் | பென்விக்கு இரிபேரன் கட்டிடக் கலைஞர்கள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "A Modular, Demountable Stadium Built From Shipping Containers Will Be Erected for Qatar 2022 World Cup". archdaily.com. 28 November 2017. பார்க்கப்பட்ட நாள் 14 October 2021.
- ↑ "Stadium 974". stadiumdb.com. பார்க்கப்பட்ட நாள் 21 April 2022.