விழப்பள்ளம் செங்கழனி மாரியம்மன் கோயில்

விழப்பள்ளம் செங்கழனி மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடிக்கு அருகில் விழப்பள்ளம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோயிலாகும்.[1]

விழப்பள்ளம் செங்கழனி மாரியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:விழப்பள்ளம்
சட்டமன்றத் தொகுதி:குறிஞ்சிப்பாடி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:செங்கழனி மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி,

செவிவழிக் கதை

தொகு

ஒரு காலத்தில் தன் மகனை அம்மை நோயில் இருந்து காத்த இந்த அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்த முடிவு செய்தார். அதன்படி சின்ன சின்ன சூலாயுதங்களை செய்து அதை வைகாசி விசாகத்தன்று தன் உடல் முழுவதும் குத்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார் எனப்படுகிறது. அதுவே இக்கோயிலில் நடந்த சொடர் உற்சவம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே பல கோயில்களில் சொடல் உற்சவம் பரவியது என்ற கருத்து உள்ளது.[2]

கோயில் அமைப்பு

தொகு

விவசாயத்தை மீட்டெடுத்ததால் இந்த அம்மனுக்கு செங்கழனி மாரியம்மன் என்ற பெயரை வேளான் மக்கள் சூட்டி வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் இக்கோயில் புதியதாக கற்கோயிலாக கட்டப்பட்டது. கோயிலானது கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் எனும் கட்டடக்கூறுகளைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தில் பால முருகனும், பிள்ளையாரும் உள்ளனர். செங்கழனி மாரியம்மனின் உற்சவருக்கு தனி சந்நதி உள்ளது. கருவறைக்கு மேலே ஐந்து நிலையில் ஒரு இராச கோபுரம் உள்ளது. கருவறையில் செங்கழனி மாரியம்மனின் மூலவர் சிரசு வடிவில் உள்ளார். அதற்கு பின்னே சுதையில் செய்யப்பட்ட அம்மன் உருவம் உள்ளது.

கோயில் கோட்டத்தில் ஒரு புற்று அம்மன் சிரசு உள்ளது. வெளிப்பிரகாரத்தில் கோயிலுக்கு வலது பக்கமாக ஒரு வேப்பமரம் உள்ளது. அந்த மரத்தடியில் வேம்பாயி அம்மன் சந்நிதி உள்ளது. வேப்ப மரத்தடியில் அம்மனின் திருவடிகள் உள்ளன.[2]

பூசைகள்

தொகு

ஆண்டுதோறும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த ஒன்பது நாட்களும் உற்சவருக்கு ஒன்பது நாயகிகளின் அலங்காரம் செய்யப்படுகிறது. தைமாதம் வரும் நான்காம் வெள்ளியன்று சொடல் உற்சவம் நடக்கிறது. அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கள் உடலில் செடல்களை குத்திக் கொள்கின்றனர். வைகாசி முதல் வெள்ளியன்று பானக பூசை என்னும் உற்சவம் நடக்கிறது. அப்போது அம்மனுக்கு பானக அபிசேகம் நடக்கிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் திருட்டு! - News7 Tamil" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-09-04. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. 2.0 2.1 2.2 "அம்மன் கோயிலிலும் திருவடி தரிசனம்!". 2023-12-07. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)