விழித்தெழு!
விழித்தெழு! ஒரு மாதாந்த சஞ்சிகை (இதழ்). 81 மொழிகளில் பிரசுரிக்கப்படும் இந்த இதழ் சராசரியாக 3,42,67,000 பிரதிகள் அச்சிடப்படுகின்றன (2007).[சான்று தேவை] தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது. இதன் முதல் பதிப்பு 1 ஒக்டபர் 1919 ஆண்டு அச்சிடப்பட்டது.[சான்று தேவை] 06 ஒக்டபர் 1937-ல் இருந்து ஆறுதல் என்று அதன் பெயர் மாற்றப்பட்டது.[சான்று தேவை] 22 ஆகஸ்ட் 1946-ம் ஆண்டிலிருந்து விழித்தெழு! என்று அழைக்கப்படுகிறது.[சான்று தேவை] இந்தப் பத்திரிக்கையின் நோக்கம் அதில் பின்வருமாறு விளக்கப்படுகிறது.
“ | விழித்தெழு! முழு குடும்பத்துக்கும் அறிவொளியூட்டுவதற்காக பிரசுரிக்கப்படுகிறது. இன்றைய பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பதென்று இது காட்டுகிறது. இது சரித்திர நிகழ்ச்சிகளையும் பல நாடுகளிலுள்ள மக்களையும் பற்றி சொல்லுகிறது, மதங்களையும் அறிவியலையும் ஆய்வு செய்கிறது. அதுமட்டுமல்ல, இது உலக சம்பவங்களை ஆழ்ந்து ஆய்வுசெய்து, அவற்றின் உண்மையான் அர்த்ததை அடுத்துக்காட்டுகிறது. என்றாலும், இது அரசியல் சம்பந்தமாக எப்பொழுதும் நடுநிலை வகிக்கிறது. ஓர் இனத்தை மற்றொன்றைவிட உயர்த்தி பேசுவதில்லை. எல்லாவற்றையும்விட முக்கியமாக, பொல்லாப்பும் அக்கிரமமும் நிறைந்த இந்த உலகை நீக்கி, சமாதானமும் பாதுகாப்புமுள்ள ஒரு புதிய உலகை கொண்டுவருவதாக கடவுள் தந்திருக்கும் வாக்கிறுதியில் நம்பிக்கையை வளர்க்கிறது. | ” |