விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு),விலையுறுதி ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு),விலையுறுதி ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை, 2020 (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act, 2020) என்பது எந்தவொரு வேளாண் விளைபொருட்களையும் உற்பத்தி செய்யவோ அல்லது பயிர் செய்வதற்கோ விவசாயி மற்றும் வாங்குபவருக்கு இடையில் ஏற்படும் ஒப்பந்தத்தின் வழியாக ஏற்படும் ஒப்பந்தமுறை விவசாயத்திற்காக ஒரு தேசிய கட்டமைப்பை உருவாக்க உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் ஆகும். ஆனால் நாடு முழுவதும் பல விவசாயிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.[1][2]
வேளாண் வணிக நிறுவனங்கள், செயலிகள், மொத்த விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் அல்லது பண்ணை சேவைகளுக்கான பெரிய சில்லறை விற்பனையாளர்களுடன் விற்பனையில் ஈடுபடும் விவசாயிகளைப் பாதுகாக்கவும் எதிர்கால விவசாய விளைபொருட்களை ஓர் ஒப்பந்தத்தின் மூலம் பரஸ்பரமாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஈட்டமிகு விலை கட்டமைப்பால் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் விற்பனைகளை மேற்கொள்ள இது உதவுகிறது. [3]
சமரச வாரியம், துணை குற்றவியல் நடுவர் மற்றும் மேல்முறையீட்டு ஆணையம் ஆகிய மூன்று நிலைகளை உடைய பிரச்சினை தீர்க்கும் வழிமுறையை இந்த சட்டம் வழங்குகிறது.
பின்னணி
தொகுவிவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு),விலை உறுதி ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை, 2020 சட்டமானது விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020 ஆகியவை 2020 ஜூன் 5 அன்று மத்திய அமைச்சரவையால் அறிவிக்கப்பட்டது.
மக்களவையில் 17 செப்டம்பர் 2020 மற்றும் மாநிலங்களவையில் 20 செப்டம்பர் 2020 இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
மேலும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம்". www.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
- ↑ "வேளாண் சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: விவசாய சங்கங்கள் சார்பில் கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு அரசு பஸ்கள் இயங்கும் - ஆட்டோ-கார்கள் ஓடாது". Dailythanthi.com. 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
- ↑ "Lok Sabha passes The Farmers' Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020 and The Farmers (Empowerment and Protection) Agreement of Price Assurance and Farm Services Bill, 2020". pib.gov.in.