விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020 விவசாய உற்பத்தி சந்தைக் குழு (ஏபிஎம்சி) சந்தைகள் மற்றும் மாநில ஏபிஎம்சி சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட பிற சந்தைகளின் வளாகங்களுக்கு அப்பாலும் விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை மாநிலங்களுக்கு உள்ளும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தை அனுமதிக்கிறது .[1][2]

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020
விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் விவசாயப் பொருட்களின் உற்பத்தி மற்றும் கொள்முதல் தொடர்பான தேர்வு சுதந்திரத்தை ஏற்படுத்தித் தரும் ஒரு சட்டம்.
நிலப்பரப்பு எல்லைஇந்தியா
இயற்றியதுமக்களவை
இயற்றியதுமாநிலங்களவை
கையொப்பமிடப்பட்ட தேதி27 செப்டம்பர்,2020
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவுவிவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020
அறிமுகப்படுத்தியதுநரேந்திர சிங் தோமர்
விவசாயத் துறை அமைச்சகம் (இந்தியா)

பண்ணை வாயில்கள், தொழிற்சாலை வளாகங்கள், கிடங்குகள், களஞ்சியம் மற்றும் குளிர் களஞ்சியங்கள் போன்ற "வெளிப்புற வர்த்தக பகுதிகளில்" வர்த்தகம் செய்ய இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. முன்னதாக, விவசாய வர்த்தகத்தை ஏபிஎம்சி யார்டுகள் / மண்டிகளில் மட்டுமே வணிகத்தினை நடத்த முடியும்.

பின்னணி தொகு

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020 விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு),விலையுறுதி ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை உடன் மத்திய அமைச்சரவையால் 2020 ஜூன் 5 அன்று அறிவிக்கப்பட்டது.

மக்களவையில் இந்த மசோதா 17 செப்டம்பர் 2020 அன்றும் மற்றும் மாநிலங்களவை 20 செப்டம்பர் 2020 அன்று இந்த மசோதவிற்கு ஒப்புதல் அளித்தது.

மேலும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "India Approves Ordinance To Allow Farmers To Freely Sell Produce". BloombergQuint.
  2. "Explained: What are the three new agri sector bills and how will they benefit the farmers | All you need to know". Jagran English. 18 September 2020.