விவியன் கிஷ்

அமெரிக்க நடிகை(1893-1993)

விவியன் கிஷ் 1912 முதல் 1920 வரையிலான காலகட்டங்களில் ஒரு முக்கிய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார், குறிப்பாக இயக்குநர் டி.டபிள்யூ. கிரிஃபித்தின் படங்களில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். ஊமைப்பட சகாப்தத்தின் அதிக வசூல் செய்த படமான கிரிஃபித்தின் இயக்கத்தில் 1915 ஆம் ஆண்டில் வெளியான தி பெர்த் ஆஃப் எ நேஷன் இவரது திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாகக் கருதப்படுகிறது. மேலும் சர்ச்சைக்குரிய நவீனத் திரைப்படங்களான 1946 ஆம் ஆண்டில் வெளியான டூயல் இன் தி சன் மற்றும் 1955 ஆம் ஆண்டில் வெளியான ஆஃபீட் த்ரில்லர் தி நைட் ஆஃப் தி ஹண்டர் ஆகியவையும் இவர் நடித்த படங்களில் மிகக் குறிப்பிடத்தகுந்தன ஆகும். 1950 களின் முற்பகுதியிலிருந்து 1980 ஆம் ஆண்டுகள் வரை அவர் கணிசமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.மேலும் 1987 ஆம் ஆண்டில் வெளியான தி வேல்ஸ் ஆஃப் ஆகஸ்டில் பெட் டேவிஸுக்கு ஜோடியாக நடித்ததே இவரின் தொழில் வாழ்க்கையின் இறுதித் திரைப்படமாகும்.மேலும் அவர் 1972 ஆம் ஆண்டில் அமெரிக்க தியேட்டர் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் .[1] திரைப்படங்கள் தவிர்த்து இவர் சிறந்த மேடை நடிகராகவும் அறியப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஓஹியோவின் ஸ்பிரிங்ஃபீல்டில் கிஷ் பிறந்தார், மேரி ராபின்சன் மெக்கானெல் (1876-1948), ஒரு நடிகை மற்றும் ஜேம்ஸ் லே கிஷ் (1873 [2] –1912) ஆகியோரின் முதல் குழந்தை ஆவார்.[3][4] லிலியனுக்கு டோரதி என்ற தங்கை இருந்தார். அவரும் ஒரு பிரபல திரைப்பட நட்சத்திரம் ஆவார்.

அவரது தாயார் எபிஸ்கோபாலியன் மற்றும் அவரது தந்தை ஜெர்மன் லூத்தரன் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு குடிகாரர் ஆவார். அவர் இவர்களை விட்டு ப்ரிந்து சென்றார். இருந்தபோதிலும் கிஷின் தாய் அவர்களுக்கு ஆதரவாக நடிப்பை மேற்கொண்டு இவர்களை கவனித்துக் கொண்டார். இவர்களது குடும்பம் இல்லினாய்ஸின் கிழக்கு செயின்ட் லூயிஸுக்கு குடிபெயர்ந்தது, அங்கு அவர்கள் லில்லியனின் அத்தை மற்றும் மாமா ஹென்றி மற்றும் ரோஸ் மெக்கானெல் ஆகியோருடன் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். அவர்களின் தாயார் மெஜஸ்டிக் கேண்டி உணவகம் ஒன்றைத் துவங்கினர். மேலும் சிறுமிகள் பாப்கார்ன் மற்றும் சாக்லேட் ஆகியவற்றை பழைய மெஜஸ்டிக் தியேட்டரில் விற்க உதவினார்கள். இவர்கள் செயின்ட் ஹென்றி பள்ளியில் பயின்றனர். அங்கு பயின்ற போது இவர்கள் பள்ளி நாடகங்களில் நடித்தனர்.

1910 ஆம் ஆண்டில், சிறுமிகள் தங்கள் அத்தை எமிலியுடன் ஓஹியோவின் மாசில்லனில் வசித்து வந்தனர், அப்போது அவர்களின் தந்தை ஜேம்ஸ் ஓக்லஹோமாவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக அறிந்தனர். ஜேக்ஸின் சகோதரர் ஆல்பிரட் கிராண்ட் கிஷ் மற்றும் அவரது மனைவி மட் ஆகியோர் வசித்து வந்த ஓக்லஹோமாவின் ஷவ்னிக்கு பதினேழு வயதாக இருந்த லிலியன் பயணம் செய்தார். அவர் தனது அத்தை மற்றும் மாமாவுடன் தங்கியிருந்து அங்குள்ள ஷாவ்னி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அவரது தந்தை ஓக்லஹோமாவின் நார்மனில் 1912 இல் இறந்தார், ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இவர் ஓஹியோவுக்கு திரும்பியிருந்தார்.

தொழில்

தொகு

ஆரம்ப கால வாழ்க்கையில்

தொகு

கிஷ் 1902 ஆம் ஆண்டில் ஓஹியோவின் ரைசிங்சனில் உள்ள தி லிட்டில் ரெட் ஸ்கூல் ஹவுஸில் மேடை நாடகங்களில் அறிமுகமானார். 1903 முதல் 1904 வரை, லிலியன் ஹெர் பர்ஸ்ட் ஸ்டெப்பில் தனது தாய் மற்றும் டோரதியுடன் கல்ந்து கொண்டார். அடுத்த ஆண்டு, அவர் நியூயார்க் நகரில் சாரா பெர்ன்ஹார்ட் தயாரித்த நிகழ்வில் இவர் நடனமாடினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Annie Berke, "'Never Let the Camera Catch Me Acting': Lillian Gish as Actress, Star, and Theorist," Historical Journal of Film, Radio, and Television 36 (June 2016), 175–89.
  2. Birth year of James Gish. "Ancestry.com".
  3. "Lillian Gish Biography". Bioandlyrics.com. February 27, 1993. Archived from the original on February 3, 2009. பார்க்கப்பட்ட நாள் October 4, 2010.
  4. "Pennsylvania Births and Christenings, 1709-1950," database, FamilySearch (https://familysearch.org/ark:/61903/1:1:V2NJ-LPH : 11 February 2018), Jas. Leonidas Gish, 11 Dec 1873; Christening, citing ZION EVANGELICAL LUTHERAN CHURCH, HUMMELSTOWN, DAUPHIN, PENNSYLVANIA; FHL microfilm 845,111.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவியன்_கிஷ்&oldid=4162018" இலிருந்து மீள்விக்கப்பட்டது