விவேக் அகர்வால்

இந்திய துடுப்பாட்டக்காரர்

விவேக் அகர்வால் (Vivek Agarwal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் துடுப்பாட்ட வீரராவார். உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரில் 1962 ஆம் ஆண்டு சனவரி மாதம் இவர் பிறந்தார். வலதுகை ஆட்டக்காரரான இவர் அரியானா மாநில அணிக்காக விளையாடினார்.

1982-83 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வங்காள அணிக்கு எதிரான ஒரு முதல் தர போட்டியில் அகர்வால் விளையாடினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அகர்வால் ஆட்ட முதல்பகுதியில் 18 ஓட்டங்கள் எடுத்தார், இரண்டாவது ஆட்டப்பகுதியில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்தியன் ஏர்லைன்சு விமானத்தில் அகர்வால் விமானப் பணியாளராகப் பணிபுரிந்தார். விமான எண் 491 விமானத்தில் இவர் பணியாளராக இருந்தார். இவ்விமானம் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாளன்று அவுரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. விபத்தில் இறந்த 55 பேரில் விவேக் அகர்வாலும் ஒருவராவார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Obituaries in 1993". விசுடன்.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_அகர்வால்&oldid=3399126" இலிருந்து மீள்விக்கப்பட்டது