விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே

காந்தி கொலைக்கான சதியாளர்
(விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே (Vishnu Ramkrishna Karkare) ( பிறப்பு 1910- இறப்பு ஏப்ரல் 6, 1974) இந்து மகாசபை உறுப்பினரான இவர் மகாத்மா காந்திக் கொலைவழக்கில் கொலைச்சதிக்கு உடந்தையாக இருந்ததினால் ஆயுள் தண்டனை பெற்றவர். இவர் மராத்தி மொழியின் கார்க்கேட் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பிறந்த தேதி குறிக்கப்படவில்லை. மழலைப் பருவத்திலேயே தாய் தந்தையர் இருவரும் காலமானாதால் மும்பை நார்த்கோட் அனாதை ஆசிராமத்தால் வளர்க்கப்பட்டார். அங்கே தோராயமாக குறிக்கப்பட்ட பிறந்தத் தேதிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரமத்தால் அவருக்கு போதிய கல்வி வசதி செய்து தரப்படவில்லை என்பதால் வளர்ந்ததும் இவர் தனது ஆர்வத்தாலும்,தனது முயற்சினாலும் மராத்தி மொழி மற்றும் இந்தி மொழியில் எழுதப் படிக்கும் ஆற்றல் பெற்றார். 10 ஆவது வயதில் தேநீர்க் கடையில் தேநீர்க் குவளைகளை சுத்தம் செய்யும் சிறுவனாக பணிபுரிந்து பின் புனேவுக்கு இடம் பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்க்கரே பெப்ரவரி 14, 1948 ல் மும்பையில் காந்தியைக் கொல்லமுயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் குற்றப் பின்னணி பிர்லா இல்லத்தில் மகாத்மா காந்தியைக் கொல்ல ஜனவரி 20, 1948, வெடிகுண்டை வெடிக்கச் செய்தது. இதனால் அவர் ஆயுள் தண்டணைப் பெற்றார் தண்டணைக்காலம் முடிந்து அக்டோபர் 13, 1964 ல் விடுதலையானபின் அகமத்நகர் இல் வியாபாரம் துவங்கி அவர் ஏப்ரல் 6, 1974 அன்று மாரடைப்பால் மரணமடையும் வரை தொடர்ந்து நடத்தி வந்தார்.

மாகாத்மா காந்தியின் கொலைக்குக் காரணமாணவர்கள் அடங்கிய நிழற்படம் நிற்பவர்கள்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா, திகம்பர் இராமச்சந்திர பாட்கே (ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்). அமர்ந்திருப்பவர்கள்: நாராயண் அப்தே, வினாயக் டி சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே

இவற்றையும் பார்க்கவும்

தொகு