விஷ்ணு சதாசிவ கோக்ஜே

விஷ்ணு சதாசிவ கோக்ஜே (Vishnu Sadashiv Kokje)(பிறப்பு: செப்டம்பர் 6, 1939) ஓர் இந்தியச் சட்ட வல்லுநர் ஆவார். இவர் இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக 8 மே 2003 முதல் 19 சூலை 2008 வரை பதவி வகித்தார்.[1] கோக்ஜே விசுவ இந்து பரிசத்தின் பன்னாட்டுத் தலைவராகவும் பணியாற்றினார்.

விஷ்ணு சதாசிவ கோக்ஜே
Vishnu Sadashiv Kokje
விஷ்ணு சதாசிவ கோக்ஜே (இடது) இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் முகமது அமீது அன்சாரியுடன்
இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
8 மே 2003 – 19 சூலை 2008
முன்னையவர்சூரஜ் பான்
பின்னவர்பிரபா ராவ்
பன்னாட்டு தலைவர், விசுவ இந்து பரிசத்
முன்னையவர்இராகவ ரெட்டி
பின்னவர்இரவீந்திர நரேன் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 செப்டம்பர் 1939 (1939-09-06) (அகவை 85)
மத்தியப் பிரதேசம்
தேசியம்இந்தியா
கல்விஇளங்கலைஇளங்கலைச் சட்டம்

வாழ்க்கை மற்றும் பணி

தொகு

கோக்ஜே 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பிறந்தார். இந்தூரில் இளநிலை சட்டம் படிப்பை முடித்த பிறகு 1964-ல் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். 1990 சூலை 28 அன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 2001-ல் 11 மாதங்கள் இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் செப்டம்பர் 2002-ல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.[2]

கோக்ஜே 8 மே 2003-ல் இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு 19 சூலை 2008 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.[3] பாரத் விகாசு பரிசத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[4] ஏப்ரல் 14, 2018 அன்று, இவர் ஸ்ரீ ராகவ் ரெட்டிக்குப் பிறகு விசுவ இந்து பரிசத்தின் பன்னாட்டுத் தலைவராக ஆனார். பிரவின் தொகாடியா பன்னாட்டுச் செயல் தலைவராக இருந்தார். [1] இவர் 2002 ஜாகியா ஜாப்ரி வழக்கில் பிரதிவாதிகளின் வழக்கறிஞர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Who is Vishnu Sadashiv Kokje?, The Indian Express, 14 April 2018.
  2. "Governor House, Himachal Pradesh, India - Governors of Himachal Pradesh". பார்க்கப்பட்ட நாள் 2018-04-14.
  3. admin (14 April 2018). "Vishnu Sadashiv Kokje becomes new VHP Chief after defeating Raghav Reddy".
  4. "Bharat Vikas Parishad – Swasth-Samarth-Sanskarit Bharat".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_சதாசிவ_கோக்ஜே&oldid=3827375" இலிருந்து மீள்விக்கப்பட்டது