விஹீர்

2009 மராத்தி திரைப்படம்

விஹீர் (Vihir, பொருள்: கிணறு) [1] என்பது 2009 ஆம் ஆண்டின் மராத்தி திரைப்படமாகும். உமேஷ் விநாயக் கல்கர்னி இப்படத்தை இயக்கியுள்ளார். இது 2010 மார்ச்சில் வெளியிடப்பட்டது. இப்படமானது பெர்லின் திரைப்பட விழா மற்றும் நெதர்லாந்தில் 2010 ஆம் ஆண்டு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

விஹீர்
இயக்கம்உமேஷ் விநாயக் குல்கர்னி
தயாரிப்புஅமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட்
திரைக்கதைகிரிஷ் குல்கர்னி, சதீ பாவே
நடிப்புமதன் தியோதர்
அலோக் ராஜ்வாடே
மோகன் அகஷே
சுலபா தேஷ்பாண்டே
ஜோதி சுபாஷ் பர்னா பெத்தே
ஒளிப்பதிவுசுதீர் பல்சனே
படத்தொகுப்புநீரஜ் வோராலியா
வெளியீடு9 அக்டோபர் 2009 (2009-10-09)(பூசன் சர்வதேச திரைப்பட விழா)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமராத்தி

இது ஏபி கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் முதல் மராத்தி படமாகும்.

கதைக்களம்

தொகு

இப்படமானது சமீர், நசிகேத் என்ற இரு சிறுவர்களின் தத்துவார்த்த உரையாடலை மைய்யக் கதையாக கொண்டது. இந்த இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர். தங்கள் வாழ்க்கையை கடிதங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்கின்றனர்.

ஒருசமயம் திருமண நிகழ்வு ஒன்றுக்காக சமீர் நசிகேதன் வீட்டுக்கு வருகிறான். அப்போது நசிகேத் பேசும்போது தன் வீடு, குடும்பம், ஊர் இவற்றை விட்டு எங்காவது தனியாக சென்றுவிட விரும்புவதாக சமீரிடம் சொல்கிறான். சில நாட்கள் கழித்து சமீர் நசிகேதனின் மரணம் குறித்து கேள்விப்படுகிறான்.

அதை நம்பாத சமீர் கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்து கொண்டதுபோல நசிகேத் ஒளிந்து கொண்டிருப்பான் என்று சமீர் நம்புகிறான். அதனால் அவனைத் தேடி காடு மலை என்று தேடி அலைகிறான். இறுதியில் ஆட்டிடையர் ஒருவர் காணாமல் போனவரை உன் இதயத்தில் தேடு என்று ஆற்றுப்படுத்துகிறார். அதன்பிறகு நசிகேத் தன் உள்ளத்தல் இருப்பதாக உணர்கிறான்.

நடிப்பு

தொகு
  • சமீர்: மதன் தியோதர்
  • நச்சிகெத்: அலோக் ராஜ்வாடே
  • அஜோபா (தாத்தா) : மோகன் அகஷே
  • ஆஜி (பாட்டி): ஜோதி சுபாஷ்
  • பாவ்-ஆஜி : சுலபா தேஷ்பாண்டே
  • சுலபா : ரேணுகா தப்தர்தார்
  • ஷோபா : அஸ்வினி கிரி
  • பவாஷா மாமா  : கிரிஷ் குல்கர்னி
  • பிரபா: அம்ருதா சுபாஷ்
  • சீமா : வீணா ஜம்கர்
  • தயாடி : பர்னா பேதே
  • சோனி: ஷரவி குல்கர்னி
  • ஆஷு : ஆதித்யா கணு
  • அன்ஷு : அஜிங்க்யா கணு
  • சமீரின் தந்தை : கிரண் யத்னோபாவிட்
  • நச்சிகேத்தின் தந்தை: அபய் கோட்சே
  • பிக்பாக்கெட்: ஸ்ரீகாந்த் யாதவ்
  • ஆட்டிடையர் : விட்டல் உமாப்

கலந்துகொண்ட திரைப்பட விழாக்கள்

தொகு
  • 14 வது பூசன் சர்வதேச திரைப்பட விழா [2]
  • 8 வது புனே சர்வதேச திரைப்பட விழா, இந்தியா
  • கேரளா சர்வதேச திரைப்பட விழா 2009
  • பெர்லின் சர்வதேச திரைப்பட விழா 2010 [3]
  • ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா 2010
  • 26 வது வார்சா சர்வதேச திரைப்பட விழா (2010)

விருதுகள்

தொகு
விருது விருது பெற்றவர் திரைப்பட விழாக்கள்
சிறந்த இயக்குனர் உமேஷ் குல்கர்னி
சிறந்த ஒளிப்பதிவாளர் சுதிர் பல்சனே ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா 2010
சிறந்த ஒலி வடிவமைப்பு அந்தோணி பிஜே ரூபன்
சிறந்த ஒளிப்பதிவாளர் சுதிர் பல்சனே ஜீ கவுரவ் விருதுகள் 2010

ஆதாரங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு

 

  1. "Vihir विहीर". Archived from the original on 2021-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.
  2. "Vihir -- Film Review" இம் மூலத்தில் இருந்து 15 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100215171118/http://www.hollywoodreporter.com/hr/film-reviews/vihir-film-review-1004021715.story. 
  3. "Marathi film 'Vihir' gets warm reception at Berlin film fest". Berlin: NDTV Movies. 18 February 2010. Archived from the original on 4 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஹீர்&oldid=3954439" இலிருந்து மீள்விக்கப்பட்டது