வி. ஆர். ஜெயராமன்

வி. ஆர். ஜெயராமன் என்பவர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தேனி அருகிலுள்ள தாடிச்சேரி எனும் ஊரைச் சேர்ந்த இவர் 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அ. இ. அ. தி. மு. க சார்பில் போட்டியிட்டு தேனி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். வொக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த இவர் இதற்கு முன்பு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-04-18.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-04-18.
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ஆர்._ஜெயராமன்&oldid=3571382" இலிருந்து மீள்விக்கப்பட்டது