வி. ஆறுமுகம் (மலேசிய அரசியல்வாதி)
மலேசிய அரசியல்வாதி
ஆறுமுகம் வெங்கடரகோ என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 2008 முதல் 2009 வரை புக்கிட் செலம்பாவ் தொகுதிக்கான கெடா மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
வி. ஆறுமுகம் | |
---|---|
புக்கிட் செலம்பாவ் தொகுதி கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2008–2009 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | மக்கள் நீதிக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
ஆறுமுகம் 2008 மலேசியப் பொதுத் தேர்தலில் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் உடனடியாக கடாரத்தின் புதிய பாக்காத்தான் ராக்யாட் கூட்டணி அரசாங்கத்தில் மக்கள் நீதிக் கட்சியில் சேர்ந்தார். கெடாவின் இந்திய சமூகத்தை மாநில அரசாங்கத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும்விதமாக இவர் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்டார். [1] இருப்பினும், பிப்ரவரி 2009 இல், ஆறுமுகம் நிர்வாகக் குழு மற்றும் மாநில சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்தார். இது இடைத் தேர்தலுக்கு காரணமாயிற்று. [2] [3]
அரசியலுக்கு வருவதற்கு முன், ஆறுமுகம் ராயல் மலேசியன் விமானப்படையில் இருந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ "DAP rep not in Kedah exco". The Star (Malaysia). 12 March 2008 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121012153053/http://thestar.com.my/news/story.asp?file=%2F2008%2F3%2F12%2Fnation%2F20617873&sec=nation.
- ↑ "PKR's Arumugam quits as assemblyman and exco member". The Star (Malaysia). 10 February 2009 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121012153743/http://thestar.com.my/news/story.asp?file=%2F2009%2F2%2F10%2Fnation%2F3232231&sec=nation.
- ↑ "PR's chain of trouble from weak link". The Star (Malaysia). 17 April 2009 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121012153817/http://thestar.com.my/news/story.asp?file=%2F2009%2F4%2F17%2Ffocus%2F3710704&sec=focus.