வி. என். சாமி

வி. என். சாமி என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளராவார். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் கலைஞர் எழுதுகோல் விருதினைப் பெற்றார்.[1]

வி. என். சாமி
பிறப்புஜூன் 9, 1931
மதுரை
தேசியம்இந்தியர்
கருப்பொருள்ஊடகவியல்

1931 ஜூன் 9 ஆம் நாள் பிறந்த இவர் தமிழ்நாடு, சுதேசமித்திரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றினார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தினமணியில் பணியாற்றி, தலைமைச் செய்தியாளராக ஓய்வு பெற்றார்.[2]

எழுதிய நூல்கள்

தொகு
  1. புகழ்பெற்ற கடற்போர்கள்
  2. இந்திய விடுதலைப் போரில் தமிழக மகளிர்
  3. விடுதலைப் போராட்டத்தில் வெளிநாட்டுப் பெண்கள்
  4. விடுதலைப்போரில் புரட்சிப் பெண்கள்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._என்._சாமி&oldid=4062735" இலிருந்து மீள்விக்கப்பட்டது