வி. பல்ராம்

இந்திய அரசியல்வாதி

வி. பல்ராம் (V. Balram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வி. பலராம் என்ற பெயராலும் இவர் அழைக்கப்பட்டார். மேலும் இவர் ஒரு வழக்கறிஞர் என்றும் கேரளாவைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி என்றும் அறியப்படுகிறார். கேரளப் பிரதேச காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் வடக்கஞ்சேரியில் இருந்து கேரள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வி. பல்ராம்
V. Balram
கேரள சட்டமன்றம்
பதவியில்
1996–2004
முன்னையவர்கே.எசு. நாராயண் நம்பூதிர்
பின்னவர்ஏ. சி. மொய்தீன்
தொகுதிவடக்காஞ்சேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-10-10)10 அக்டோபர் 1947
இறப்பு18 சனவரி 2020(2020-01-18) (அகவை 72)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

டி. ராமன் நாயர் மற்றும் வெள்ளூர் சின்னம்மு அம்மா தம்பதியருக்கு 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று பல்ராம் பிறந்தார். [1] [2] கேரளப் பிரதேச காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்தார்.[3]

1996 ஆம் ஆண்டு வடக்கஞ்சேரி தொகுதியில் போட்டியிட்டு கேரள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 2001 ஆம் ஆண்டில் மீண்டும் இதே தொகுதியில் வென்று [5] தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். கே. முரளீதரன் இவரது சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2004 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் பல்ராம் போட்டியிட்டார். இருவரும் அத்தேர்தலில் தோல்வியடைந்தனர். [6]

பல்ராம் காஞ்சனமாலாவை மணந்து கொண்டார். [1] இவர்களுக்கு தீபா , லட்சுமி என்று இரண்டு மகள்கள் பிறந்தனர்.[7]

பல்ராம் 18 ஜனவரி 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதியன்று தனது 72 ஆவது வயதில் காலமானார் [2] [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "V. BALARAM". பார்க்கப்பட்ட நாள் 19 January 2020.
  2. 2.0 2.1 "Ex-MLA V Balram passes away". https://www.newindianexpress.com/cities/kochi/2020/jan/19/ex-mla-v-balram-passes-away-2091432.html. பார்த்த நாள்: 19 January 2020. 
  3. 3.0 3.1 "Former Cong. MLA V. Balram dead". https://www.thehindu.com/news/national/kerala/former-cong-mla-v-balram-dead/article30596225.ece. பார்த்த நாள்: 19 January 2020. 
  4. "Winners of Kerala Assembly elections 1996 with victory margins". பார்க்கப்பட்ட நாள் 19 January 2020.
  5. "Winners of Kerala Assembly elections 2001 with victory margins". பார்க்கப்பட்ட நாள் 19 January 2020.
  6. "Murali resigns from Antony Cabinet". https://m.timesofindia.com/india/Murali-resigns-from-Antony-Cabinet/articleshow/675036.cms. பார்த்த நாள்: 19 January 2020. 
  7. "Former MLA and Congress leader V Balaram passes away". https://keralakaumudi.com/en/news/mobile/news.php?id=227252&u=. பார்த்த நாள்: 19 January 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பல்ராம்&oldid=3814272" இலிருந்து மீள்விக்கப்பட்டது