வி. வி. சி. ஆர். முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப் பள்ளி
தமிழ்நாட்டின் ஈரோடு ஈரோட்டிலுள்ள ஒரு பெண்கள் பள்ளி
வி. வி. சி. ஆர். முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப் பள்ளி (V.V.C.R Murugesanar Sengunthar Girls Hr Sec School, ERODE ) என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் ஈரோட்டிலுள்ள ஒரு பெண்கள் பள்ளியாகும்.[1] இப்பள்ளியானது 1998 ஆம் ஆண்டு மகளிர் உயர்நிலைப் பள்ளியாக தோற்றுவிக்கப்படு, 2002 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 2019 ஆண்டு காலகட்டத்தில் தமிழ், ஆங்கிலவழியில் 844 மாணவிகள் பயின்றுவருகின்றனர். இப்பள்ளி மாணவிகளின் தனித்திறன்களை வளர்ப்பதற்காக நாட்டு நலப்பணித்திட்டம், நூகர்வோர் மன்றம், இன்ட்ராக்ட் கிளப், பசுமைப்படை திட்டம், சாரணியர் இயக்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை செயல்படுகின்றன.
வி. வி. சி. ஆர். முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப் பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
ஈரோடு, தமிழ்நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | சுயநிதி பள்ளி |
தொடக்கம் | 1998 |
பள்ளி அவை | தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியம் |
பள்ளி மாவட்டம் | ஈரோடு |
பால் | பெண்கள் மட்டும் |
மாணவர்கள் | 844 |
வகுப்புகள் | முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை |
இணைப்பு | தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிக் கல்வித்துறை |