வீரகாரன்

(வீரக்காரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வீரக்காரன்( காவல் தெய்வம்) அல்லது வீரகாரன் என்பது தமிழ்நாட்டில் வன்னியர்களில் ஒரு பிரிவினரால் பல்வேறு ஊர்களிலும் வழிபடப்படும் குலத்தெய்வம் ஆகும். பெரும்பாலும், வீரக்காரன் கோயில்கள் சேலம் மாவட்டத்திலும், தருமபுரி மாவட்டத்திலும் உள்ளன. தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையிலும், சேலம் மாவட்டம் எடப்பாடியிலும் , ஓமலூர் அருகே பெரியேரிப்பட்டியிலும், சொட்டையனூரிலும், ஜலகண்டாபுரம் அருகில் கரிக்காப்பட்டியிலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் காளிப்பட்டியிலும் வீரக்காரன் கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிற தெய்வத்தைக் குலதெய்வமாக வழிபடுவோரில் சில பிரிவினர் தமது குலத்தெய்வக் கோயில்களில் தனியாக வீரக்காரன் சிலையையும்( உதாரணமாக சங்ககிரியில் உள்ள பூமுனி சுவாமி மாற்றும் பச்சியம்மன் கோவில் ) வைத்து வழிபடுகின்றனர். இத் தெய்வத்திற்குத் தெவம் என்ற திருவிழாவை நடத்தி, ஆயிரக் கணக்கான ஆட்டுக் கிடாய்களையும், சேவல்,பன்றியையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரகாரன்&oldid=3771129" இலிருந்து மீள்விக்கப்பட்டது