வீரக்குமாரசாமி கோயில், வெள்ளக்கோயில்

தமிழ்நாட்டின் வெள்ளக்கோவில் ஒரு இந்து கோவில்

அருள்மிகு வீரக்குமாரசாமி கோயில் தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக் கோயிலானது கொங்கு வெள்ளாளர் இனத்தில் உள்ள ஆந்தைகூட்டம், தனஞ்செயகூட்டம், மாடகூட்டம் என 11 கூட்டங்களின் குல தெய்வமாகும். இங்கு மூலவர் வீரக்குமாரசாமி. 54' உயரங்கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரமும், மூன்று நிலை கொண்ட 35' உயர உள்கோபுரமும் கொண்டுள்ளது.

கோயில் வரலாறு

தொகு

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கோயில் அமைந்துள்ள பகுதி பெரும் வனமாக இருந்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் இந்தப் பகுதியில் ஆந்தைகுல நல்லன கவுண்டர்,தஞ்செய குல பழனிக் கவுண்டர், சேலம் சின்னமலைக் கவுண்டர், தேவண கவுண்டர், மாடகுல செல்லப்ப கவுண்டர் ஆகியோர் வாழ்ந்து வந்தனர்.அந்த காலகட்டத்தில் நல்லன கவுண்டர் மகன் முதலி கவுண்டர் தன் பண்ணைகளைப் பார்த்துக் கொள்ள சந்தன நாடார் என்பவரை நியமித்தார். அப்போது மேய்ச்சலுக்கு சென்று வந்த மாடுகளில் ஒன்று பாலின்றி இருப்பதை கண்டு சந்தன நாடார் மீது சந்தேகம் கொண்டார். இந்த நிகழ்வு தொடர்ந்து வந்துள்ளது. சந்தன நாடார் மிகுந்த கவலை அடைந்தார். முடிவில் உண்மையைக் கண்டறிந்தார். அந்தப் பசு ஒரு புற்றில் நின்று பால் சுரந்துள்ளது. ஒரு சில நாள்களில் முதலி கவுண்டரும் இதைக் கண்டார். அப்போது அப்புற்றிலிருந்து குழந்தை முகத்துடன் பாம்பு ஒன்று தோன்றியது, அது முருகனை ஒத்த தெய்வம் அதுதான் பின்னாளில் வீரக்குமாரசாமி என அழைக்கப்பட்டு வணங்ககப்பட்டு வருகிறது. இக்கோயிலில் வீரக்குமார சாமி சிலை கல்லிலோ, உலோகத்திலோ செய்யப்படவில்லை, மாறாக புற்று ஒரு தெய்வ வடிவில் காட்சி தருகிறது.

வழிபாடு

தொகு

இக்கோயிலில் பொட்டிலி வழிபாடு மிகுந்த சிறப்புப் பெற்றது. இக்கோயிலின் தல விருட்சம் காக்கராட்டான் மரம் ஆகும்.

திருவிழாக்கள்

தொகு

தமிழ் மாசி மாதத்தில் சிவராத்திரி அன்று தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு