வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில்

வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

தஞ்சாவூர்-திருவையாறு சாலையில் கண்டியூருக்குக் கிழக்கே கும்பகோணம் சாலையில் 1 கிமீ தொலைவில் உள்ளது.

மூலவர்

தொகு

சங்க இலக்கியங்கள் கான் அமர் செல்வி என்று சக்தியை வழிபடும் நிலையைக் குறிக்கின்றன. அவ்வாறான வழிபாடு நடைபெறும் இடங்கள் காடமர்செல்வி கழிபெருங்கோட்டம் என்று அழைக்கப்படுகின்றன. இங்குள்ள மூலவர் மாரியம்மன் ஆவார்.[1]

பெயர்க்காரணம்

தொகு

வீர சோழன் என்னும் மன்னனால் ஆளப்பட்ட வீரணன்சோலை என்ற இடமே நாளடைவில் வீரசிங்கம்பேட்டை ஆகியுள்ளது.[1]

எழுவர்

தொகு

ஏழு பேர் சகோதரியாகக் கருதப்பட்டு கடைசியில் உள்ள தங்கையாக இங்குள்ள அம்மனைக் கூறுகின்றனர். இவரை இளமாரியம்மன் என்றழைக்கின்றனர். பங்குனி மாதத்திலும், ஆவணி மாதத்திலும் இக்கோயிலில் விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளி இணைப்புகள்

தொகு