வீரட்டாகாச தாண்டவம்

வீரட்டாகாச தாண்டவம் சிவபெருமானின் எண்ணற்ற தாண்டவங்களில் ஒன்றாகும். இத்தாண்டவம் வீரட்டாகாச நடனம் எனவும் அழைக்கப்படுகிறது.

தாண்டவக் காரணம் தொகு

படைப்பின் கடவுளான பிரம்மா பிரணவத்தின் பொருள் அறியாமல் இருந்தமையால் கோபம் கொண்ட முருகப் பெருமான், பிரம்மனை சிறையில் அடைத்தார். தேவர்கள் பிரம்மனை காக்க சிவபெருமானிடம் வேண்டியமையால், முருகப்பெருமானிடம் சிவன் சென்று பிரம்மனை விட்டுவிடுமாறும், பிரணவத்தின் பொருளை கூறுமாறும் கேட்டார். முருகப்பெருமானும் சிவகுருவாக இருந்து பிரவணத்தின் பொருளை சிவபெருமானுக்குக் கூறினார். இதனால் வீர மேலீட்டு சிவபெருமான் ஆடிய தாண்டவம் வீரட்டாகாச தாண்டவம் எனப்படுகிறது[1].

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 67
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரட்டாகாச_தாண்டவம்&oldid=3076381" இலிருந்து மீள்விக்கப்பட்டது