பரதநாட்டிய கரணங்களை ஆண் ஆடும் பொழுது, அது தாண்டவம் என்று அழைக்கப்பெறுகிறது. தாண்டவம் என்பது உள்ளிருக்கும் தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் பல்வேறு உறுப்புகள் இணைந்து இயங்குவதாகுமென பி. ஆர். நரசிம்மன் சைவ மரபும் மெய்ப்பொருளியலும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்து மத ஆண் கடவுள்களான சிவபெருமான், விநாயகன், முருகன், திருமால் ஆகியோர் தாண்டவங்களை ஆடுபவர்களாக புராணங்களிலும், இந்து சமய நூல்களிலும் சித்தரிக்கப்படுகின்றனர். இவர்களில் சிவபெருமான் இந்த தாண்டவங்கள் ஆடுவதில் வல்லவராகவும், நடன கலையின் நாயகன் என்று பொருள்படும் படி நடராசர் (நடனராசர்) எனவும் அழைக்கப்படுகின்றார்.

சிவ நடராசர், நடனகலையின் கடவுள் தமிழ்நாடு, சோழர், இந்தியா


சிவதாண்டவங்கள்

தொகு
 
Some of the 108 Karanas of Nataraja at Kadavul Hindu Temple, on Kauai, Hawaii. It is one of the few complete collections in existence, commissioned by Satguru Sivaya Subramuniyaswami in the 1980s. Each sculpture is about 12 inches tall. Chidambaram Temple is also known to have a complete set.

சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரையான தாண்டவங்களுள் நூற்றியெட்டு தாண்டவங்களை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஆடுகின்ற தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணிக்கை அடிப்படையில் பஞ்ச தாண்டவங்கள், சப்த தாண்டவங்கள் என்று பல பரிவுகளாக அறியப்படுகின்றன.


முருக தாண்டவங்கள்

தொகு

சிவபெருமானின் இளைய குமாரனான முருகப்பெருமான் குடை தாண்டவம், துடி தாண்டவம் ஆகிய தாண்டவங்களை ஆடியுள்ளார். [1]

திருமாலின் தாண்டவங்கள்

தொகு

வைணவக் கடவுளான திருமால் தனது கண்ணன் அவதாரத்தில் காளிங்க நர்த்தனம் என்ற தாண்டவம் ஆடியதாக வைணவ நூல்கள் கூறுகின்றன. இவை தவிற அல்லி, குட மல் தாண்டவங்களையும் திருமால் கண்ணன் ஆவதாரத்தில் ஆடியமையாக நூல்கள் தெரிவிக்கின்றன. [2]


  1. அல்லி தாண்டவம்
  2. குட தாண்டவம்
  3. மல் தாண்டவம்

கருவிநூல்

தொகு

பரதக்கலை (நூல்) - வி.சிவகாமி

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 68
  2. சைவ சமய சிந்தாமணி நூல் பக்கம் 68
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டவம்&oldid=3076388" இலிருந்து மீள்விக்கப்பட்டது