வீரபாண்டியன் (கதைமாந்தர்)

வீரபாண்டியன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற மந்தாகினியின் கணவனும், நந

வீரபாண்டியன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற மந்தாகினியின் கணவனும், நந்தினி, மதுராந்தகனின் தந்தையும் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற வீரபாண்டியனைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

வீரபாண்டியன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பால்வரலாற்று கதைமாந்தர்
தொழில்பாண்டிய மன்னன்
தேசிய இனம்பாண்டிய நாடு

கதாபாத்திரத்தின் இயல்பு தொகு

வீரபாண்டியன் இலங்கை அரசரோடு சேர்ந்து சுந்தர சோழரின் படைகளை எதிர்த்துப் போர் புரிந்தான். அதில் தோல்வியுற்று சில காலம் மறைந்திருந்தான். கடலில் நினைவற்று கிடந்த வீரபாண்டினைக் கருத்திருமன் எனும் படகோட்டி காப்பாற்றினான். படகில் இருந்து இறங்கியதும் அங்கிருந்த ஒரு மனிதர், மந்தாகினியை அடையாளம் கண்டு, அவளைத் தன் மகளென்று கூப்பிட்டு சென்றார். பின் அந்த மனிதர் மந்தாகினியை தன் குடும்பத்தாருடன் ஒப்படைத்துவிட்டு இறந்து விட்டார். வீரபாண்டியன் இலங்கை மன்னனுக்குக் கருத்திருமனிடம் ஓலை கொடுத்தனுப்பினான். பின்பு உரோகண நாட்டிற்கு கருத்திருமனும், வீரபாண்டியனும் சென்று அங்கு இலங்கை அரசனுடன் பல இடங்களுக்குச் சென்றார்கள். இறுதியாக ஒரு பள்ளத்தாக்கொன்றில் பாண்டிய மன்னர்களின் மணி மகுடமும், இரத்தின ஆரமும், அளவில்லாத பொற்காசுகள், நவரத்தினங்களும், விலை மதிப்பில்லாத ஆபரணங்களும் இருந்தன.

இலங்கை மன்னர், கருத்திருமனிடம் பொற்காசுகளை அளித்து மந்தாகினியைக் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறினான். இலங்கை அரசனுடன் இணைந்து பெரும் படை திரட்டி மீண்டும் சோழப் பேரரசின் மீது போர் தொடுத்தான். சுந்தர சோழர் படையினைத் தலைமை தாங்கிய ஆதித்த கரிகாலனிடம் தோற்று ஓடி ஒளிந்தான். அவனைத் தேடிவந்த ஆதித்த கரிகாலனிடம் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மீது ஒளிந்து கொண்டு, அசிரீரி போல வீரபாண்டியன் ஒளிந்திருக்கும் இடத்தினைத் தெரிவித்தான். இறுதியாக வீரபாண்டியனின் தலையை வெட்டி ஆதித்த கரிகாலன் வெற்றி கொண்டான்.

நூல்கள் தொகு

வீரபாண்டியனைக் கதாபாத்திரமாகக் கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் 58-ஆம் அத்தியாயம் தொகு